மேஷம் ஐப்பசி மாத இராசி பலன் 2020!

மேஷ ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 

மேஷ ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த இன்பத்தை தரக் கூடிய நல்ல மாதமாக ஐப்பசி அமையும். இம்மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் புதிதாக தொழில் தொடங்கலாம். ஏனெனில் இம்மாதத்தில் இந்த ராசியின் கிரக நிலைகள் நன்றாக உள்ளது.

மேலும் ஒரு ராசிக்கு 1, 5, 9 க்கான இடம் வலுவாக இருக்கும் போது ராசிக் காரர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். அந்த வகையில் இந்த ஐப்பசி மாதத்தில்  மேஷ ராசி 9 வது இடத்தை பெறுவதால் குரு பகவானொடு சூரியன் சேர்ந்து மிக சிறப்பான பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும் நிறுவனத்தில் வேலை புரியும் மேஷ ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவும்  இம்மாதம் ஏற்ற மாதமாக இருக்கின்றது. எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தை தரக் கூடிய ஒரு அற்புத மாதம் ஐப்பசி மாதம் என்றே சொல்லலாம். இருப்பினும் இம்மாதம் முடியும் வரை வெளியில் பயணம் செல்லும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மேஷ ராசி பெண்களுக்கு திருமணம் பற்றிய பேச்சுகள் வீட்டில் நடைபெற வாயப்பு  உள்ளது. மேலும் இம்மாதத்தில் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திர காரர்கள்  கொஞ்சம் வாய் பேச்சை குறைப்பது நல்லது. குடும்பத்தில் தேவையில்லாத வீண் சண்டைகள் ஏற்படும். இதை தவிர்க்க இம்மாதத்தில்  வரும் வெள்ளிக்கிழமைகளில் விநாயக பெருமானுக்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.
 

From around the web