மேஷம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள மேஷம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ம் இடத்தில் கேதுவுடன் இணைந்து பலமாக இருக்கின்றார். அதே சமயம் செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருந்தாலும், குரு பகவான் வக்ர நிவர்த்தியாகி உங்கள் ராசியை பார்ப்பாதல் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து கொண்டே இருக்கும். உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பிறரால் பாராட்டு, பிள்ளைகளால்
 
Mesham aadi matha rasi palan 2018

அன்புள்ள மேஷம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம்  எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ம் இடத்தில் கேதுவுடன் இணைந்து பலமாக இருக்கின்றார். அதே சமயம் செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருந்தாலும், குரு பகவான் வக்ர நிவர்த்தியாகி உங்கள் ராசியை பார்ப்பாதல் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பிறரால் பாராட்டு, பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உங்கள் பிள்ளைகளின் எதிர்கால கனவுகள் நினைவாகும். இல்லத்தில் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் அந்யோன்யம் அதிகரிக்கும். ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு பிறகு சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்வதால் உங்களுக்கு நன்மை தர இயலாது. குரு பகவான் துலாம் ராசியில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பாதல் குடும்பத்தில் சுபவிசேஷ பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும்.

ஜூலை 30,31 உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆகஸ்ட் 10,11 தேதிகளில் உறவினர்களால் மனக்கசப்பான சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அனாவசியமாக பேசுவதை தவிர்த்து விடுங்கள். பணியிடத்தில் செல்வாக்கு கூடும். விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் உண்டாகும். உங்கள் திறமைக்கேற்ற நல்ல நிறுவனத்தில் அழைப்பு வரக்கூடும்.

இரண்டு சுப கிரஹங்கள் குரு, சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தடைபட்ட காரியங்கள் எல்லாம் நல்ல விதமாக முடிவடையும். செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருப்பதால் முன்கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஜூலை 18,19, ஆகஸ்ட் 14,15 தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு வரக்கூடும். ஒரு சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும்.

From around the web