மீனம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. மீனம் ராசியினருக்கு நான்காம் இடத்தில் வருகின்ற ராகுவும், பத்தாம் இடத்தில் வருகின்ற கேதுவும் என்ன பலன்களை கொடுக்க போகின்றார்கள் என்பதை விரிவாக காணலாம். பொதுவான பலன்கள்: இதுவரை ஐந்தாம் இடத்து ராகுவால் மனதில் தேவையற்ற மனக் குழப்பங்கள், இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் கொடுத்து வந்தார். பிள்ளைகள் வழியில் சங்கடங்களும், கஷ்டங்களும் கொடுத்து வந்து இருப்பார். இனி ராகு பெயர்ச்சியாகி புதன்
 
Kanni ragu kethu peyarchi 2019

இந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. மீனம் ராசியினருக்கு நான்காம் இடத்தில் வருகின்ற ராகுவும், பத்தாம் இடத்தில் வருகின்ற கேதுவும் என்ன பலன்களை கொடுக்க போகின்றார்கள் என்பதை விரிவாக காணலாம்.

மீனம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

பொதுவான பலன்கள்:

இதுவரை ஐந்தாம் இடத்து ராகுவால் மனதில் தேவையற்ற மனக் குழப்பங்கள், இல்லத்தில் சண்டை, சச்சரவுகள் கொடுத்து வந்தார். பிள்ளைகள் வழியில் சங்கடங்களும், கஷ்டங்களும் கொடுத்து வந்து இருப்பார். இனி ராகு பெயர்ச்சியாகி புதன் வீடான மிதுனம் ராசியில் சஞ்சரிப்பார். நான்காம் இடத்தில் ராகு வருகின்ற பொழுது கேட்கின்ற இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.

இதுவரை பதினோராம் இடத்தில் இருக்கின்ற கேது உங்களுக்கு பல விதத்தில் லாபங்களும், முன்னேற்றத்தையும் கொடுத்து வந்து இருப்பார். இனி கேது பெயர்ச்சியாகி தனுசு ராசியில் சஞ்சரிப்பார். கேது சனியோடு இணைந்து பத்தாம் வீடான குருவின் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு நல்ல வளர்ச்சியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் கொடுக்கப் போகின்றது. இதுவரை கடன் சுமையில் இருந்தவர்களுக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்.

பத்தாம் இடத்தில் இருக்கின்ற கேதுவால் எவ்வித பாதிப்புகள் ஏற்படாது என்றாலும் எதிலும் ஒரு பதட்டமாக காணப்படுவீர்கள். நிலுவையில் இருந்த வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

இதுவரை பண கஷ்டம் இருந்தவர்களுக்கு கடனை திரும்ப செலுத்தும் அளவிற்கு தாராளமான பணவரவு உண்டு. திருமணம் ஆகாத மீனம் ராசியினருக்கு மனதிற்கு பிடித்தமான வரன் அமையக்கூடும். பயணத்தின் பொது கவனம் தேவை. மூன்றாம் நபர்களின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்திடுங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவ போய்  வீண் பிரச்சனைகளில் சிக்கி கொள்ளாதீர்கள். பழைய வீட்டை இடித்து புதிய வீட்டை கட்டுவதற்கு கேட்கின்ற இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் இருக்கின்றது.

உத்தியோகஸ்தர்களுக்கு :

பணியிடத்தில் வேகமும், விவேகமும் உண்டாகும். உங்களுக்கு கொடுக்கின்ற பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகள் ஆச்சரியம் படும் அளவிற்கு முடியாத விஷயங்களை முடித்து காட்டுவீர்கள். எதிர்பாராத விதமாக இடமாற்றம், ஊர்மாற்றம் ஏற்படக்கூடும். வேலை விஷயமாக வெளியூர் அல்லது  வெளிமாநிலம் செல்ல நேரிடும். பணியிடத்தில் மற்றவர்களை பற்றி விமர்சனம் செய்வதை தவிர்த்திடுங்கள்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

செய்கின்ற தொழிலில், வியாபாரத்தில் போட்டிகள், பொறாமைகள் இருந்தாலும், உங்களது சமயோஜித புத்தியால் லாபத்தை பெருக்குவீர்கள். குரு வக்ர காலத்தில் எதிர்பார்த்த நல்லவை நடைபெறக்கூடும். புதிய தொழில், வியாபாரம் தொடங்க நல்ல காலமாக இருக்கின்றது. உணவு, ஊடகத்துறை, பத்திரிகைத் துறை, மருந்து, சிமெண்ட், ப்ரோகிரேஜ், ரியல் எஸ்டேட், ப்ரோகிரேஜ், ஏற்றுமதி இறக்குமதி போன்ற வகையால் லாபம் வரக்கூடும்.

அரசுக்கு முறையாக செலுத்து வேண்டிய வரியை செலுத்தி விடுங்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடு செய்வதை தவிர்த்திடுங்கள். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கேட்டுக் கொண்டு புதிய வியாபாரத்தில் ஈடுபடுங்கள்.

மாணவ – மாணவியர்கள்:

படிப்பில் கவனம் தேவை. அதிக மதிப்பெண் பெற போராடித்தான் படிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபாடு உண்டாகக்கூடும் என்பதால் மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். இளம் வயதில் இருக்கும் மீனம் ராசியினர் விளையாட்டு, தேவையற்ற செயல்களில் கவனம் செலுத்தாமல், பகுதி நேரத்தை வீணாக்காமல் பயனுள்ளதாக ஏதேனும் கோர்ஸில் சேர்ந்து படித்து வைத்துக் கொள்ளுங்கள். தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள்.

குடும்பம்:

நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உற்சாகமாக செயல்படுவீர்கள். சண்டை, சச்சரவு நீங்கி இணக்கம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வீடு, வண்டி வாங்கும் யோகம் இருக்கின்றது. குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல மழலைச் செல்வம் கிட்டும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

உடல்நலம்:

பித்தம், மயக்கம், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மனதை அமைதியாக வைத்து கொள்ள தியானம், யோக பயற்சி மேற்கொள்ளுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்:

குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மேலும் பணியிடத்தில் சங்கடங்கள் தீர தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யுங்கள்.

From around the web