மீனம் ஐப்பசி மாத இராசி பலன் 2020!

மீன ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 

எதையும் தைரியமாக எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். சுக்கிரன் வலுவாக இருப்பதால் வீடு, நிலம், சொத்து போன்றவற்றை விரைவில் வாங்க வாய்ப்பு உள்ளது. நிறுவனத்தில் வேலைப் பழு அதிகம் இருக்கும். இதனால் அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். மிகுந்த திறன் உடையவர்களாக இருப்பதால் அதிக வேலைகள் உங்களிடமே வந்து குவியும்.

ஆனால் இப்படி வேலை செய்தாலும் பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்க வாய்ப்பு இல்லை. இதை நினைத்து மிகவும் வருந்துவீர்கள். இந்த ராசி மாணவர்கள் அறிவுசார் திறனால் ஆசிரியர்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் பாராட்டைப் பெறுவார்கள்.

குடும்பத்தில்  சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும்.

உங்களது உடல் நலத்தில் சிறிது மாற்றங்கள் நிகழலாம். பண வரவு தேடி வரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபடுவர்களுக்கு எதிர் பார்த்ததை விட நிறைய லாபம் கிடைக்கும்.

இதை எதிர்கால தேவைக்காக சேமித்து வைக்க சாத்தியம் அமையும். உறவினர்களால் எதிர்பாராமல் மன சங்கடங்கள் ஏற்படும். புதிதாக தொழில் தொடங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் பணம் தொடர்பான பிரச்சினைகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது மிகுந்த நன்மையை உண்டாக்கும்.

திங்கள் கிழமைகளில் முருக பகவானை விரதம் இருந்து வணங்கினால் குடும்பத்தில் இருக்கும் தீய சக்திகள் விலகி தெய்வ அருள் கிடைக்கும்.
 

From around the web