மீனம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள மீனம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் அமைதியால் சாதிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் குரு பகவான் வக்ர நிவர்த்தியாகி எட்டாம் இடத்தில் இருப்பதால் எதுவும் சற்று முயற்சி எடுத்த பிறகே நிறைவேறும். முயற்சிக்கு ஏற்ற பலன்களைக் கொடுப்பார். உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் குரு பார்வை பதிவதால் நற்பலன்களை கொடுப்பார். செவ்வாய், கேதுவால் பணவரவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புதிய வேலை அமையக்கூடும். சுக்கிரன்
 
Meenam aadi matha rasi palan 2018

அன்புள்ள மீனம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் அமைதியால் சாதிக்கும்  மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் குரு பகவான் வக்ர நிவர்த்தியாகி எட்டாம் இடத்தில் இருப்பதால் எதுவும் சற்று முயற்சி எடுத்த பிறகே நிறைவேறும். முயற்சிக்கு ஏற்ற பலன்களைக் கொடுப்பார். உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய  இடங்களில் குரு பார்வை பதிவதால் நற்பலன்களை கொடுப்பார். செவ்வாய், கேதுவால் பணவரவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புதிய வேலை அமையக்கூடும்.

சுக்கிரன் ஆறாம் இடத்தில் மறைந்து இருப்பதால் செலவுகளும், வீண் அலைச்சலும் ஏற்படக்கூடும். வாகனம் பழுதாவது, வீட்டில் உள்ள உபகரணங்கள் பழுதாவதை சீர் செய்வது என்று இருப்பீர்கள். ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சாரம் செய்வதால் வேலைச்சுமை குறையும். ஏழாம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பாதல் இளமை, அழகு கூடும். தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

இந்த மாதம் செவ்வாய், சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் வரவேண்டிய பாக்கி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், ராகு சேர்க்கை இருப்பதால் பூர்வீக சொத்துகளால் பிரச்சனை தலைத்தூக்கும். இல்லத்தில் ஏற்பட்டு இருந்த மனக்குழப்பங்கள் அகலும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். ஒரு சிலருக்கு புதிய வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்லுங்கள்.

சகோதர, சகோதிரி வகையால் நன்மை ஏற்படக்கூடும். உங்கள் மேற்பார்வையில் பிள்ளைகளின் போக்கை பார்த்துக் கொள்ளுங்கள். தாய்வழி ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், மாற்றங்கள் நிகழும்.

From around the web