மகரம் ஐப்பசி மாத இராசி பலன் 2020!
 

மகர ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

வெளிநாடு பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. கலைத்துறையில் உள்ளவர்கள் தங்கள் சாதனையை வெளிப்படுத்தி நல்ல பெயரை பெறுவார்கள். இதனால் இவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வரும்.

இப்படி தேடி வரும் போதே பயன்படுத்தி கொண்டால் பின்னாளில் பெரிய நட்சத்திரமாக வலம் வரலாம். மற்ற தொழில் நிறுவனத்தில் பணி புரியும் மகர ராசிக்காரர்கள் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வார்கள். இதனால் பணியில் அதிக ஈடுபாடு கொள்ள முடியாது. மின் சம்பந்தபட்ட துறைகளில் வேலை செய்வோர் மிகுந்த கவனத்துடன் வேலையை செய்வது மிகவும் நல்லது.

இல்லையெனில் உயிருக்கு கேரண்டி கிடையாது. வண்டி வாகனங்கள் அடிக்கடி பழுதாகக் கூடும். எனவே அவற்றை சரி செய்ய அதிக  பணத்தை இறைக்க வேண்டாம். இந்த மாதம் முடிந்ததும் வாகனங்கள் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

குடும்ப உறவுகளில் சிறிது விரிசல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தண்ணீர் நிறைய பருகுதால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். குழந்தைகளின் படிப்பில் அதிக அக்கறை காட்டுவது நல்லது.

குழந்தையின் பெயரில் எதிர்கால தேவைக்காக வங்கிகளில் பணத்தை போடுவதற்கு ஏற்ற மாதம். சனிக் கிழமைகளில் குளித்துவிட்டு காகத்திற்கு சாதம் வைப்பதால் நமக்கு ஏற்பட இருக்கும் பாதிப்பிலிருந்து விலகி நன்றாக வாழலாம்.

From around the web