மகரம் ஆவணி மாத ராசி பலன் 2018!

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் துணிச்சலாக செயல்பட கூடிய மாதமாக இருக்கும். மகரம் ராசியினர்கள் மாத தொடக்கத்தை விட மாதப் பிற்பகுதியில் நற்பலன்களை அடைவார்கள். ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு புதன் சாதகமாக இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியை கொடுப்பார். உங்கள் திறமை பளிச்சிடும். இதுவரை இருந்து வந்த குழப்பான சூழ்நிலை மாறும். குரு பகவான் பத்தாம் இடத்தில் இருந்து கொண்டு சுமாரான பலன்களை கொடுப்பார். அவரது ஐந்தாம் பார்வை விசேஷமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும்
 
Magaram aavani matha rasi palan 2018

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் துணிச்சலாக செயல்பட கூடிய மாதமாக இருக்கும். மகரம் ராசியினர்கள் மாத தொடக்கத்தை விட மாதப் பிற்பகுதியில் நற்பலன்களை அடைவார்கள். ஆகஸ்ட் 28-ம் தேதிக்குப் பிறகு புதன் சாதகமாக இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியை கொடுப்பார். உங்கள் திறமை பளிச்சிடும். இதுவரை இருந்து வந்த குழப்பான சூழ்நிலை மாறும்.

குரு பகவான் பத்தாம் இடத்தில் இருந்து கொண்டு சுமாரான பலன்களை கொடுப்பார். அவரது ஐந்தாம் பார்வை விசேஷமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். இதுவரை இருந்த வந்த மந்த நிலை மாறும். புதிய உற்சாகம், மன தைரியம் கூடும். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்கள், தனியார் துறையில் பணிபுரிவர்கள் நன்மைகள் பெறுவர். வியாபாரம், தொழில், வேலை போன்ற அனைத்தும் லாபகரமாக அமையக்கூடும்.

ஒரு சிலருக்கு எதிர்பாராத வகையில் மாற்றங்கள் நிகழும். வேலை சம்மந்தமாக வெளிமாநிலம், வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் உருவாகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் அதிகரிப்பதால் சற்று கடுமையாக உழைக்க வேண்டி வரக்கூடும்.

மாற்று யோசனைகள், புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபத்தை பெருக்குவீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். இதுவரை நீங்கள் உழைத்த உழைப்புக்கு வீண் போகாமல் உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் பாராட்டு பெறுவீர்கள்.

சுக்கிரனால் குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உண்டாகும். உறவினர்கள் வருகையால் இனிய சூழல் உருவாகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். இதுவரை இல்லத்தில் ஏற்பட்ட எண்ணற்ற பிரச்சனைகளும், குழப்பங்களும் ஆகஸ்ட் 28-தேதிக்குப் பிறகு மறையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும்.

From around the web