மகரம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள மகரம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமாக இருக்கப் போகின்றது. ராசிக்கு 10-ம் இடத்து குரு வக்ர நிவர்த்தியாகி 2,4,6 ஆகிய இடங்களை பார்ப்பதால் பணவரவு சீராக வரக்கூடும். உங்கள் ராசிநாதன் சனி பகவான் விரயச் சனியாக தொடர்வதால் செலவுகள் அதிகரிக்கும். பணவரவு சீராக இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடுத்தடுத்து இருந்துக் கொண்டே இருக்கும். ஜென்மத்தில் இருக்கும் உச்சம் பெற்ற செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியம்
 
Magaram aadi matha rasi palan 2018

அன்புள்ள மகரம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறும் மாதமாக இருக்கப் போகின்றது. ராசிக்கு 10-ம் இடத்து குரு வக்ர நிவர்த்தியாகி 2,4,6 ஆகிய இடங்களை பார்ப்பதால் பணவரவு சீராக வரக்கூடும். உங்கள் ராசிநாதன் சனி பகவான் விரயச் சனியாக தொடர்வதால் செலவுகள் அதிகரிக்கும். பணவரவு சீராக இருந்தாலும் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடுத்தடுத்து இருந்துக் கொண்டே இருக்கும்.

ஜென்மத்தில் இருக்கும் உச்சம் பெற்ற செவ்வாய் வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும். ஏழரைச் சனி தொடர்வதால் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்ய முடியாமல் போகக்கூடும். ஒரு சிலருக்கு இழுபறியாக முடிவடையும். அஷ்டமத்தில் இருக்கும் புதனால் குழப்பம் நிலவும். கணவன் மனைவிடையே கருத்து மோதல்கள் வரக்கூடும். வீட்டில் நடப்பதை யாரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உங்களுக்கு கொடுக்கும் பணியை சரியான நேரத்தில் முடிக்க இயலாமல் திணறுவீர்கள்.

சுக்கிரன் 8-ம் இடத்தில் சிம்மத்தில் இருக்கும் பொழுது திடீர் பயணங்கள் ஏற்படும். ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு சஞ்சாரம் செய்வதால் தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் விரைந்து முடிவடையும். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வசதிகள் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும். அஷ்டமாதிபதி சூரியன் ராகுவுடன் இணைந்து இருப்பதால் அரசு வகையில் ஏதேனும் தொல்லை உருவாகலாம்.

ஜென்மத்தில் கேதுவும் ஏழாம் இடத்தில் ராகுவும் தொடர்வதால் தொழிலில் ஏற்றமும், இறக்கமும் இருந்து கொண்டே இருக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் குருவின் பார்வையால் உங்களுக்கு வரும் பல வித இடையூறுகளையும் முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

From around the web