துலாம் நவம்பர் மாத இராசி பலன் 2020!
 

துலாம் ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

ஒரு புதுவித உணர்வுடன் எப்போதும் இல்லாதது போன்று அனைத்திலும் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். இந்த ஈடுபாடு பல வெற்றிகளை தேடி தரும். இருப்பினும் சிலரின் கோபத்திற்கு ஆளாவதற்கு இட்டுச் செல்லும். 

பிறர் செய்த உதவியை மறவாது அவருக்கு உதவி செய்வதற்காக காத்துக் கொண்டிருப்பீர்கள். செய்நன்றி மறவாதர்கள் என்பதில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை. இதனால் பலரும் உங்களை பாராட்டுவார்கள். 

சமயத்தில் அவர்களும் உங்களுக்கு சில உதவிகளை தாமாக செய்ய முன் வருவார்கள். வீண் பிரச்சினைகள் வீட்டின் வாசல் தேடி வரும். இதனால் சிறிது எச்சரிக்கையுடன் மற்றவர்களுடன் பழகுவது நல்லது. வீட்டில் வளர்க்கும் பிற உயிரினங்கள் மீது மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். அளவாக சாப்பிடுவது நல்லது.

இல்லையெனில் உணவினால் உடல் நலம்  பாதிக்கப்பட வாய்ப்பு நிறையவே உள்ளது. மற்றவர்களிடம் பார்த்து பழகுவது மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். எந்த காரணத்தை கொண்டும் வீட்டில் நடக்கும் குடும்ப பிரச்சனைகளை வெளியில் பக்கத்து வீட்டுக் காரர்களுடன் சொல்லக் கூடாது. 

பின்பு, இதுவே உங்களுக்கு வினையாக அமையக் கூடும். கணவன் மனைவி இடையே  பாசம் பெருகும். வேலை செய்யும் நிறுவனத்தில் சக ஊழியர்களின் பழிச் சொல்லிற்கு ஆளாக நேரிடும். 
எனவே அவற்றை புத்திசாலித்தனத்துடன் கையாள்வது மிக நன்று.

From around the web