சிம்மம் நவம்பர் மாத இராசி பலன் 2020!

 

சிம்ம ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

வேலைப் பளு அதிகரிக்கும். இதனால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பூரம் நட்சத்திரம் உள்ளவர்களுக்கு இந்த மாதம் மனத்திற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். மகிழ்ச்சி கூடும். 

புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும் யோகம் உண்டு. தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். 

குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேசும் போது கவனமாக பேச வேண்டும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டு . இம்மாத தொடக்கம் முதலே எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும். 

உடல் நலம் சீராகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பண வரவு அதிகரிக்கும். நினைத்த காரியம் கை கூடும். 

வெள்ளி கிழமைகளில் காளி அம்மனை வழிபட்டு  வந்தால் தீமை விலகும்.  பணியில் மற்றும் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனை விலகும். பரம்பரை சொத்து விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய பொருள் வாங்கும் போது கவனம் தேவை. 

மின் சாதன பொருட்களை தவிர்ப்பது நல்லது. இந்த மாதத்தில் பொருளாதார நிலை சீராக இருக்கும். தேவையற்ற விஷயத்தில் தலையிட வேண்டாம். சாலையை கடக்கும் போது கவனம் தேவை. 
 

From around the web