கும்பம் ஐப்பசி மாத இராசி பலன் 2020!

கும்ப ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 

நீண்ட நாட்களாக கணவன் , மனைவி இருவரிடையே  இருந்த வந்த மனக்கசப்புகள் நீங்கும். எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அதை பேசியே சரி செய்து விடுவீர்கள்.

புதுமண தம்பதியர்கள் நல்ல நண்பர்களாய் திகழ்வார்கள். பிரச்சினை ஏற்பட்டாலும் அதை தன் மனப்பக்குவத்தால் சரி செய்து கொள்வார்கள். ஏற்கனவே இருந்த கடன் தொல்லை நீங்குவதற்கு முன் புதிதாக ஒரு கடனை வாங்குவார்கள். கடனுக்கான வட்டியை மட்டும்  கட்டமுடியுமே தவிர முதல் தொகையை அடைக்க முடியாது. இதனால் முடிந்த அளவு கடனை தவிர்ப்பது நல்லது.

துறைகளில் வேலைப் பழு காரணமாக அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் நண்பர் தரும் நல்ல அறிவுரை உங்களின் மன அழுத்தத்தை குறைக்கும். திருமணம் தள்ளி போகும் திருமண தம்பதியினருக்கு விரைவில் திருமணம் நிச்சயிக்கப் பட்டு திருமணம் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அமையும்.

குழந்தை வரம் வேண்டி பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும். 

சனிக் கிழமை நாட்களில் பெருமாளை வணங்குவது இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லது. வீண் செலவுகள் ஏற்படலாம். விரய செலவுகள் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் படிப்பு சம்பந்தப் பட்ட விஷயங்களில் மிகுந்த அக்கறையும், ஆர்வமும் செலுத்துவது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.
 

From around the web