கும்பம் ஆடி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள கும்பம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் மாதமாக இருக்கப் போகின்றது. நினைத்த காரியங்கள் இடையூறுகள் எதுவுமின்றி நடைபெற வேண்டும் என்றால் குரு பலம் நன்றாக இருக்க வேண்டும். அது போல தான் இப்பொழுது உங்கள் ராசிக்கு குரு பகவான் 9-ம் இடத்தில் வக்ர நிவர்த்தியாகி ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பாதல் இல்லத்தில் மங்கள நிகழ்ச்சி நடைபெறக்கூடும். இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்கள் அகலும். உங்கள் ராசிநாதன் சனி பகவான்
 
Kumbam aadi matha rasi palan 2018

அன்புள்ள கும்பம் ராசிக்காரர்களே, இந்த ஆடி மாதம் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் மாதமாக இருக்கப் போகின்றது. நினைத்த காரியங்கள்  இடையூறுகள் எதுவுமின்றி நடைபெற வேண்டும் என்றால் குரு பலம் நன்றாக இருக்க வேண்டும். அது போல தான் இப்பொழுது உங்கள் ராசிக்கு குரு பகவான் 9-ம் இடத்தில் வக்ர நிவர்த்தியாகி ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பாதல் இல்லத்தில் மங்கள நிகழ்ச்சி நடைபெறக்கூடும். இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்கள் அகலும். உங்கள் ராசிநாதன் சனி பகவான் 11-ம் இடத்தில் வக்ர இயக்கத்தில் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடி வரக்கூடும்.

இந்த மாதம் சூரியன், புதன், ராகு,குரு, சனி மாதம் முழுவதும் நற்பலன்களை தருவார்கள். பொருளாதார வளர்ச்சி ஏற்படக்கூடும். புதனால் புதிய சிந்தனைகள், யோசனைகள் பிறக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும் என்பதால் அதனை புத்திசாலி தனமாக நீண்ட நாட்களுக்கு சேமிப்பு திட்டத்தில் வங்கி கணக்கில் சேமித்து வையுங்கள். திருமணம் போன்ற சுப விஷய பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். கணவன் மனைவிடையே ஒற்றுமை புலப்படும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். விலகி சென்ற உடன்பிறப்புகள் ஒன்று சேர்வார்கள். சுக்கிர பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் அழுகு, இளமை கூடும். ஆகஸ்ட் 2-ம் தேதி சுக்கிரன், கன்னி ராசிக்கு சஞ்சாரம் செய்வதால் அவ்வப்போது ஆரோக்கிய தொல்லை, அலைச்சல் என்று இருக்கக்கூடும். முக்கியமான கிரகங்கள் சாதகமான நிலையில் இருப்பதால் சிறிது முயற்சி செய்தாலும் வெற்றி கிடைக்கும்.

From around the web