கன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. இதுவரை பதினோராம் இடத்தில் இருக்கின்ற ராகு பகவான் உங்களுக்கு பல விதத்தில் பொருளாதாரத்தில் வளர்ச்சியை கொடுத்து வந்தார். பதினோராம் இடத்தில் இருக்கின்ற ராகு பெயர்ச்சியாகி 10-ம் இடத்திற்கு வர போகின்றார். ஐந்தாம் இடத்தில் இருக்கின்ற கேது பெயர்ச்சியாகி நான்காம் இடத்திற்கு வர போகின்றார். இனி பத்தாம் இடத்தில் வருகின்ற ராகுவும், நான்காம் இடத்தில் வருகின்ற கேதுவும் என்ன பலன்களை தர
 
Kanni ragu kethu peyarchi 2019

இந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. இதுவரை பதினோராம் இடத்தில்  இருக்கின்ற ராகு பகவான் உங்களுக்கு பல விதத்தில் பொருளாதாரத்தில் வளர்ச்சியை கொடுத்து வந்தார். பதினோராம் இடத்தில் இருக்கின்ற ராகு பெயர்ச்சியாகி 10-ம் இடத்திற்கு வர போகின்றார். ஐந்தாம் இடத்தில்  இருக்கின்ற கேது பெயர்ச்சியாகி நான்காம் இடத்திற்கு வர போகின்றார். இனி பத்தாம் இடத்தில் வருகின்ற ராகுவும், நான்காம் இடத்தில் வருகின்ற கேதுவும் என்ன பலன்களை தர போகின்றார்கள் என்பதை விரிவாக காணலாம்.  

கன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

பொதுவான பலன்கள்:

இந்த வருடம் கன்னி ராசியினருக்கு ராகு-கேது பெயர்ச்சி சுமாரான பலன்களை கொடுக்க போகின்றது .பத்தாம் இடத்தில் இருக்கின்ற ராகு பொருள் விரயங்களும், இடையூறுகளையும் ஏற்படுத்துவார். நான்காம் இடத்து கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். பிற்பகுதியில் கேதுவால் தாராளமான தனவரவு உண்டு.

கேது சனியோடு இணைந்து தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். கேதுவுடன் சனி இணைகின்ற பொழுது சனியின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆனாலும் எதிலும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டும். இல்லத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். இல்லத்தில் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்லுங்கள்.

மார்ச் 13-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை குரு அதிசாரம் பெற்று தனுசு ராசியில் சஞ்சரிப்பார். குரு நான்காம் இடத்தில் சனி, கேதுவுடன் இணைகின்ற பொழுது மனத்தளர்ச்சி ஏற்படக்கூடும். உங்களுக்கு மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கக்கூடும். தாராளமான பணவரவு இருந்தாலும், செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அநாவசியமான பொருட்களின் மீது முதலீடு செய்வதை தவிர்த்திடுங்கள்.

இல்லத்தில் இருப்பவர்களுடன் வீண் விவாதங்களை தவிர்த்திடுங்கள். சுப காரியங்கள் தடைபடலாம். இங்கே குறிப்பிடுவது கன்னி ராசியின் ராகு-கேது பெயர்ச்சியின் பொது பலன்கள் மட்டுமே. சுய ஜாதகத்தில் உங்களுக்கு நடைபெறுகின்ற தசா புத்தி, கிரகங்களின் பலம், சேர்க்கை, பார்வை வைத்து பலன்கள் மாறுபடக்கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பணியிடத்தில் அதிகம் உழைக்க வேண்டிய சூழல் உருவாகும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். சிலருக்கு செய்கின்ற வேலையில் ஆர்வம் இல்லாமல் போகலாம். மார்ச் 13-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருப்பதால் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு சிலருக்கு செய்கின்ற வேலையில் திருப்தியின்மை, வேலைச்சுமை, இடமாற்றம் போன்றவை உண்டாகும்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டு. பொருள் விரயம் ஏற்படக்கூடும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். எதிரிகள் தொல்லைகள் அதிகரிக்கும். இருக்கின்ற வியாபாரம் அல்லது தொழிலை செய்தாலே போதுமானது. புதிய வியாபாரம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்காது. உங்களது சாதுர்யமான பேச்சால் லாபத்தை பெருக்குவீர்கள்.

மாணவ – மாணவியர்கள்:

கன்னி ராசி மாணவ – மாணவிகளுக்கு படிப்பில் கவனம் சிதறும். தகாத சேர்க்கையால் வீண் வம்புகள் வரக்கூடும் என்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வது நல்லது. மார்ச் 13-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் சற்று சிரத்தை எடுத்தே படிக்கச் வேண்டிய சூழல் ஏற்படக்கூடும். கல்வி விஷயமாக வெளிநாடு செல்லும் கனவு நனவாகும்.

குடும்பம்:

கன்னி ராசியினருக்கு இந்த ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து பொறுப்புகளும்,  வேலையும் இருந்து கொண்டே இருக்கக்கூடும். பிள்ளைகளின் நடவடிக்கையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. வீட்டில் இருக்கும் மூத்தவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களுக்கு தகுந்த நேரத்தில் உதவ முன்வருவார்கள். வீட்டில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. தடைபட்டு வந்த திருமணம், குழந்தை பாக்கியம், மனை வாங்குவது, வீடு கட்டுவது போன்றவை எல்லாம் அக்டோபர் மாதத்திற்கு பிறகு நல்லபடியாக நடைபெறக்கூடும்.

உடல்நலம்:

வயிறு, அஜீரணம் கோளாறு ஏற்படக்கூடும்.  பயணத்தின் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கேதுவால் உடலில் சிறு சிறு உபாதைகள் வரக்கூடும்.

வணங்க வேண்டிய தெய்வம்:

சனி பகவானும், ராகுவும்-கேதுவும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பெருமாள் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வாருங்கள். மார்ச் 13-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள்.

From around the web