கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2018!

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கும், ஏழாம் இடத்திற்கும் அதிபதியான குரு பகவான் பெயர்ச்சியாகி மூன்றாம் இடத்திற்கு வருகின்றார். இதுவரை இரண்டாம் இடத்தில் இருக்கும் குரு உங்களுக்கு பல வித நன்மைகள் தந்து கொண்டு இருந்தார். தற்பொழுது மூன்றாம் இடத்திற்கு குரு வரும் பொழுது எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொது பலன்கள் : மூன்றாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பார்வை உங்களது 7,9,11 வீடுகளில் பதிவதால் கிடைக்க வேண்டியவை தானாகவே கிடைத்துவிடும். குரு பகவான் 3-ம்
 
Kanni guru peyarchi palangal 2018 - 2019

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கும், ஏழாம் இடத்திற்கும் அதிபதியான குரு பகவான் பெயர்ச்சியாகி மூன்றாம் இடத்திற்கு வருகின்றார். இதுவரை இரண்டாம் இடத்தில் இருக்கும் குரு உங்களுக்கு பல வித நன்மைகள் தந்து கொண்டு இருந்தார். தற்பொழுது மூன்றாம் இடத்திற்கு குரு வரும் பொழுது எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொது பலன்கள் :

மூன்றாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பார்வை உங்களது 7,9,11 வீடுகளில் பதிவதால் கிடைக்க வேண்டியவை தானாகவே கிடைத்துவிடும். குரு பகவான் 3-ம் இடத்தில் இருந்தாலும் சுய ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. தீய வழியில் மற்றும் வீட்டில் இருப்பவர்களை மனம் புண்படும்படி நடந்து கொண்டால் மட்டுமே குரு பகவான் உங்களுக்கு பாடத்தை கற்றுக் கொடுப்பார்.

களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமையக்கூடும். அடுத்து உங்களது 9-ம் வீடு அதாவது பாக்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் மிக பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். வசீகரமான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்ந்து விடுவீர்கள். பதினோராம் இடத்தை குரு பார்ப்பதால் எதிர்பாராத வகையில் பணவரவு அதிகரிக்கும்.

பணப்பற்றாக்குறை ஏற்படாது என்றே கூறலாம். உங்களது திறமை பளிச்சிடும். எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். விலையுர்ந்த பொருட்களை வாங்கும் திட்டம் சற்று தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கல்வி:

மிகவும் கடினமாக இருக்கும் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவீர்கள். உங்களது முன்னேற்றம் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும். விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு இருக்கும்.

குடும்ப வாழ்க்கை:

குடும்பத்தில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். இல்லத்தில் சுப கரிய பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். உறவினர் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.

வேலை/தொழில்:

வேலைச்சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு சற்று காலம் தாமதம் ஏற்படலாம். தொழில் அதிபர்கள் தங்களது அயராத உழைப்பினால் முன்னேற்றம் அடைவார்கள். போட்டிகள் அதிகரிக்கும். அதனை சமாளிக்க புதிய யுக்திகளைப் பயன்படுத்தி உங்கள் தொழிலை வளர்ச்சி அடைய செய்வீர்கள். சிலருக்கு வெளிநாடு அல்லது வெளிமாநிலத்திற்கு வேலை விஷயமாக செல்ல நேரிடும்.

வியாபாரிகள்:

இதுவரை மந்தமாக இருந்த வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும். உங்கள் பதினோராம் இடத்தை குரு பார்க்கும் பொழுது சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். சொந்த வியாபாரம் மற்றும் கூட்டு வியாபாரம் செய்கின்றவர்களுக்கும் எதிர்பார்த்தபடி லாபம் வரக்கூடும். டிரேடிங், கல்வி துறை, மார்க்கெட்டிங் துறை, மளிகைக்கடை, ஜவுளி கடை நடத்துபவர்களுக்கு இது ஏற்றமான காலமாகும். நீங்கள் லாபம் ஒரு மடங்கு எதிர்பார்த்தால் இருமடங்காக வரும் நேரமாக இருக்கப் போகின்றது.

குறிப்பாக உணவு பொருட்களை வாங்கி அல்லது செய்து விற்பனை செய்கின்ற சிறுதொழில் முனைவோருக்கு நல்ல லாபம் வரக்கூடும். புதிய வியாபாரம் தொடங்க இது ஏற்ற காலமாக இருக்கின்றது.

பரிகாரம்:

அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு புதன்கிழமை, சனிக்கிழமை அல்லது திருவோணம் நட்சத்திரம் அன்று சென்று தரிசனம் செய்து வாருங்கள். சிக்கலான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

From around the web