கன்னி ஐப்பசி மாத இராசி பலன் 2020!
 

கன்னி ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

கன்னி ராசிக்காரர்கள் இம்மாதத்தில் மிகுந்த வலிமையுடையவர்களாக விளங்குவார்கள். வெளியில் பகைவரால் சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் வலிமையால் அவற்றை எல்லாம் வெல்வீர்கள். நீதிமன்ற வழக்கு தொடர்பான பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வீர்கள். மேலும் இந்த பிரச்சினை இம்மாத இறுதியில் தான் முடிவடைய வாய்ப்புள்ளது.

நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டவர்களுக்கு வயிறு வலி நீங்கும். உடலில் ஏதேனும் காயங்கள் இருப்பின் அது விரைவில் குணமடையும்.

கண்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வேலை செய்யும்போது பார்த்து கவனமுடன் வேலை செய்வது கண்ணை பாதுகாக்கும்.

கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மழை பெய்யும் போதும், காற்றடிக்கும் போதும், இடி இடிக்கும் போதும் சற்றுப் பாதுகாப்புடன் இருப்பது மிகவும் நல்லது.

இம்மாதத்தில் முன்னோர்களுக்கு படையலிட்டு அவர்களை வணங்குவதால் நமக்கு ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளிலிருந்து விலகலாம். முன்னோர்களின் ஆசி இந்த ராசிக்காரர்களுக்கு மிக மிக முக்கியமானது.

எனவே அவர்களின் ஆசியைப் பெறுவதற்கு அனைத்து விதமான செயல்களையும் அல்லது காரியங்களையும் செய்வீர்கள்.  மேலும் குல தெய்வ தரிசனம் அனைத்து விதமான பலன்களையும் பெறுவதற்கு ஏற்றவாறு அமையும்.

From around the web