கன்னி ஆவணி மாத ராசி பலன் 2018!

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பொருளாதார வளம் பெருகும் மாதமாக இருக்கும். இந்த ஆவணி மாதத்தில் குரு, ராகு, சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொருளாதாரம் வளம் சிறக்கும். உங்கள் ராசிநாதன் புதன் ஆகஸ்ட் 28ம் தேதி வரை சாதகமற்ற நிலையில் இருந்தாலும், குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் நற்பலன்களைக் கொடுப்பார். வசதி பெருகும். சூரியனால் பணம் விரயம் ஏற்படலாம் என்பதால் சுப விரயமாக மாற்றி கொள்ளுங்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு
 
Kanni aavani matha rasi palan 2018

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் பொருளாதார வளம் பெருகும் மாதமாக இருக்கும். இந்த ஆவணி மாதத்தில் குரு, ராகு, சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொருளாதாரம் வளம் சிறக்கும்.

உங்கள் ராசிநாதன் புதன் ஆகஸ்ட் 28ம் தேதி வரை சாதகமற்ற நிலையில் இருந்தாலும், குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் நற்பலன்களைக் கொடுப்பார். வசதி பெருகும். சூரியனால் பணம் விரயம் ஏற்படலாம் என்பதால் சுப விரயமாக மாற்றி கொள்ளுங்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு வீடு, மனை, புதிய வாகனம், மின்சாதன பொருட்களை வாங்க யோகம் அமையும்.

உங்கள் ராசிக்கு குரு பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பிள்ளைகளின் வழியில் நல்ல நிகழ்ச்சிகள் அல்லது சம்பவங்கள் நடைபெறும். எதிர்பாராத வகையில் தனலாபம் உண்டாகும். தேவையற்ற விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். வீண் பழி, எதிரிகளின் கை ஓங்கும் நிலை ஏற்படும் என்பதால் பொறுமையுடன் செயல்படுங்கள். உடல்நலக்குறைவு ஏற்படக்கூடும்.

மார்க்கெட்டிங் துறை, ஆசிரியர், எழுத்தாளர், வழக்கறிஞர்கள், பேச்சை நம்பி தொழில் புரிகின்றவர்களுக்கு இந்த ஆவணி மாதம் ஏற்றமான மாதமாக இருக்கப் போகின்றது. புதிய முதலீடு செய்வதற்கு ஏற்றமான காலமாக இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகளை திறப்பீர்கள்.

வியாபாரம், தொழில் செய்கின்றவர்களுக்கு இரட்டிப்பு லாபம் வரக்கூடும். அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத உயர்வு கிடைக்கும். ஆகஸ்ட் 20-ம் தேதிக்குப் பிறகு உங்கள் கோரிக்கைகளை முன்வைத்தால் விரைவில் நடைபெறக்கூடும்.

From around the web