கடகம் ஐப்பசி மாத இராசி பலன் 2020!
 

கடக ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

கடக ராசி தம்பதியினர் இம்மாதத்தில் மிகுந்த அன்பும், காதலுடன் விளங்குவார்கள். கணவன் மனைவி இடையே உள்ள மனஸ்தாபங்கள் நீங்கி மிகுந்த அன்புடன் ஒருவர் மீது ஒருவர் பாசத்தை வெளிப்படுத்துவர். 

உடல்நிலை விஷயத்தில் சிறிது கவனம் செலுத்துவது நல்லது. பண தொடர்பான விசயங்களில் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பது நல்லது. எவரிடமும் பணத்தை பெறவும் வேண்டாம். எவரிடமும் பணத்தை கொடுக்கவும் வேண்டாம். கடக ராசிக்காரர்கள் இம்மாதம் முடியும் வரை கடவுள் மீது மிகுந்த பக்தி மயத்துடன் விளங்குவீர்கள். இந்த பக்தி உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.

மூட்டுவலி, கை, கால் வலியால் அவதிப்பட வாய்ப்புண்டு. வீட்டிற்கு சொந்தங்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. சொந்தங்களால் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். கவலை வேண்டாம். உறவுகளில் எந்த ஒரு விரிசலும் ஏற்படாது. குழந்தைகளால் பெற்றோருக்கு பெருமையும், புகழும் ஏற்படும். 

குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வீர்கள்.

வெளியில் செல்லும்போது மற்ற உயிரினங்களால்  நமக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வெளியில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும். முருகனை வழிபாடு செய்வதால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளிலிருந்து விலகி பாதுகாப்புடன் இருக்கலாம்.
 
 

From around the web