மிதுனம் நவம்பர் மாத இராசி பலன் 2020!
 

மிதுன ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 
மிதுனம் நவம்பர் மாத இராசி பலன் 2020!

மிதுன ராசிக்காரர்களுக்கு இம்மாதம் மேன்மை தரும் மாதமாக இருக்கும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பு மிகும். இம்மாதத்தில் பல நாட்களாக இருந்து வந்த நோய் குணமடைந்து உங்கள் கவலைகள் அகலும். 

உடன் பணிபுரிபவர்களால் தொல்லை உண்டாகும் முக்கியமான விஷயங்களை பகிர கூடாது. இம்மாத இறுதிக்குள்  நீங்கள் நினைத்த நல்ல பலன்கள் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரம் உள்ளவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். 

மறதியால்  சற்று அவதிக்கு உள்ளாகி வேதனை அடைவீர்கள். முன்னோர்களை நினைத்து வழிபடுவது நல்லது. புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உருவாகும். கொடுக்கல் வாங்கல் சீராகும். 

இம்மாத வெள்ளி கிழமைகளில் பார்வதி தேவியை வழிபட்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வரும் பிரச்சினைகள் விலகும். தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவரை வழிபட்டால் நன்மை கிடைக்கும். பண வரவு நன்றாக இருந்தாலும் செலவு அதிகரித்து பண பற்றாக்குறை ஏற்படும். 
 
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மிதுன ராசிக்காரர்களுக்கு இம்மாதம் பயணம் அதிகரிக்கும். ஏழைகளுக்கு உணவு, உடை  தானம் செய்வதால் குடும்பத்திலும் பணியிலும் ஏற்றம் கிடைக்கும். 

From around the web