தனுசு ஐப்பசி மாத இராசி பலன் 2020!
 

தனுசு ராசிக்கான ஐப்பசி மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

தனுசு ராசிக்காரர்கள் இம்மாதத்தில் மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள். பல நாட்களாக விற்காமல் இருந்த நிலம், சொத்துக்கள் அனைத்தையும் விற்று விடூவீர்கள். விற்ற பணத்தை  கொண்டு புதிதாக ஒரு தொழிலை தொடங்குவீர்கள்.

இந்த தொழில் அமோக வெற்றி பெறும். இந்த வெற்றி மேலும் பல தொழில்களில் ஈடுபட செய்யும். ஆனால், இவை சிறிது நஷ்டத்தை ஏற்படுத்தும். இருப்பினும் தொழில் முதலுக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.

பெற்றோர்களிடம் சண்டை போடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் வீண் மனக்கஷ்டத்திற்கு ஆளாகுவீர்கள். காதல் வலையில் சிக்கி தவிப்பீர்கள். மாத இறுதியில் தெளிவு பெறுவீர்கள். நண்பர்களுடன் சில கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை சரிசெய்ய முயற்சித்தாலும் பலனை தராது. 

தாய், தந்தையரின் உடல் நலத்தின் மீது அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. தாய், தந்தையரின் மீது மிகுந்த பாசம் கொள்வீர்கள். நீண்ட நாளாக இருந்த வந்த பிரச்சினைகள் இப்போது நீங்கும்.

குழந்தைகள் மீது மிகுந்த கவனம் செலுத்துவீர்கள். வண்டியில் பயணம் செய்யும்போது கூடுதல் கவனம் செலுத்து அவசியமாகும் .  பிரச்சினைகள் நீங்க சிவன் கோவிலுக்கு சென்று சிவனை தரிசனம் செய்வது மிக நல்லது. மேலும் அம்மன் வழிபாடு செய்வதாலும் நமக்கு ஏற்பட இருக்கும் விபத்தை தவிர்க்கலாம்.
 

From around the web