டிசம்பர் மாத ராசி பலன் 2018!

மேஷம்: அன்புள்ள மேஷம் ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு தாராளமான பணவரவு வரக்கூடிய மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். இம்மாதம் மேஷம் ராசியினருக்கு பணப் பற்றாக்குறை அகலும் மாதமாக இருக்க போகின்றது. வாங்கிய கடனை எவ்வாறு செலுத்துவது என்று இருந்தவர்களுக்கு புதிய திருப்பங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். மாதத் தொடக்கத்தில் சூரியன் குருவோடு
 
December matha rasi palan 2018

மேஷம்:

அன்புள்ள மேஷம் ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு தாராளமான பணவரவு வரக்கூடிய மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். இம்மாதம் மேஷம் ராசியினருக்கு பணப் பற்றாக்குறை அகலும் மாதமாக இருக்க போகின்றது. வாங்கிய கடனை எவ்வாறு செலுத்துவது என்று இருந்தவர்களுக்கு புதிய திருப்பங்கள் உண்டாகும்.

ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். மாதத் தொடக்கத்தில் சூரியன் குருவோடு இணைந்து 8-ம் இடத்தில் இருப்பதால் சற்று விரயங்கள் ஏற்படக்கூடும். அனாவசிய செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உங்களது ஆளுமை மற்றும் செயல் திறன் பாராட்டும்படி இருக்கக்கூடும். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியான குரு பகவான் அஷ்டமத்தில் இருந்தாலும், அஸ்தமனத்தில் இருப்பதால் தொழிலில் முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். அரசு சம்மந்தமான காரியங்கள் நல்ல படியாக முடிவடையும். பணியிடத்தில் வேலை சுமை அதிகரிக்கக்கூடும். புதிய பொறுப்புகளும், வாய்ப்புகளும் வரக்கூடும். புதிய வேலைக்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு  நல்ல செய்தி வரக்கூடும். வியாபாரம் மற்றும் சிறு தொழில் செய்கின்றவர்களுக்கு கணிசமான லாபம் வரக்கூடும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் இல்லத்தில் குதூகலமாக காணப்படுவீர்கள். ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து எடுக்கின்ற முயற்சிகள் நல்ல பலன்களை கொடுக்கும். எதிர்பாராத வகையில் இடமாற்றம், வீடுமாற்றம், ஊர்மாற்றம் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு 3,6-ம் இடங்களின் அதிபதியான புதன் பகவான் வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். அதன் விளைவாக இல்லத்தில் ஒற்றுமை புலப்படும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த வந்த கருத்து  மோதல்கள் மறையக்கூடும்.

ரிஷபம்:

அன்புள்ள ரிஷபம் ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு சரிசமமான பலன்களை தரும் மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடும். மாத தொடக்கத்தில் சூரியன் குருவோடு இணைந்து ஏழாம்  இடத்தில் இருப்பதால் திடீர் மாற்றங்கள் உண்டாகும். சூரியனோடு குரு இணைந்து அஸ்தமனம் ஆகி இருப்பதால் நற்பலன்கள் உண்டாகும். சிலருக்கு பலமுறை முயன்றும் நடைபெறாத விஷயங்கள் சட்டென்று முடிந்து விடும். வீடு கட்டுவது, வாங்கும் முயற்சியில் இருக்கின்றவர்களுக்கு நல்ல படியாக முடிவடையும். கேட்கின்ற இடத்தில்  இருந்து உங்களுக்கு கடனுதவி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 2,5-ம் இடங்களின் அதிபதியான புதன் பகவான் டிசம்பர் 8-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். அதன் பிறகு புதன் சூரியனோடு இணைந்து இருக்கும் பொழுது புத-ஆதித்ய யோகம் ஏற்படுகின்றது. சமூகத்தில் உங்களது மதிப்பும் மரியாதை உயரும். சிலருக்கு எதிர்பாராத விதமாக புதிய வேலை அமையக்கூடும்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை புலப்படும். இல்லத்தில் மங்கள பேச்சு வார்தைகள் நல்ல படியாக முடிவடையும். வேலை விஷயமாக வெளிநாடு அல்லது வெளிமாநிலத்திற்கு செல்ல வாய்ப்புகள் வரக்கூடும். உங்கள் மனதிற்கு பட்டத்தை உடனடியாக செயல் புரிய வேண்டும் என்று எண்ணுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள். வியாபாரம், தொழில் ரீதியாக சிலருக்கு இழப்புகள் உண்டாகலாம். எதிலும் தீர யோசித்து, அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கொண்டு செயலில் ஈடுபடுங்கள்.

அஷ்டமச்சனி தொடர்வதால் தொழிலில் அதிகம் முதலீடுகளை தவிர்த்திடுங்கள்.உறவினர்கள் இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள். பயணத்தின் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் கூடுதல் அலைச்சலுடன் செய்து முடிப்பீர்கள்.

மிதுனம்:

அன்புள்ள மிதுனம் ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு வசதி, வாய்ப்புகள் பெருகும் மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் வலுவாக இருப்பதால் நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெறக்கூடும். உங்களது பிள்ளைகள் சம்மந்தமாக எடுக்கின்ற முயற்சிகள் நல்ல விதமாக முடிவடையும். வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கின்றது. இரண்டாம் இடத்தில் ராகு இருப்பதால் தாராளமான பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். ஏதோ ஒரு வகையில் வருமானம் வந்து கொண்டே இருக்கக்கூடும். சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும்.

உங்கள் ராசிக்கும், 4-ம் வீட்டிற்கு அதிபதியான புதன் பகவான் டிசம்பர் 8-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். புதன் சூரியனோடு இணைந்து இருக்கும் பொழுது புத-ஆதித்ய யோகம் ஏற்படுகின்றது. வேலை விஷயமாக புதிய பொறுப்புகளும், வாய்ப்புகளும் வரக்கூடும். அரசு வேலைக்கு  முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும்.

இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறக்கூடும். உற்றார், உறவினர்களின் விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். ஆறாம் இடத்தில் இருக்கும் குரு சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகி இருப்பதால் அதிக அளவில் நன்மையே நடைபெறக்கூடும். பணியிடத்தில் வேலைப்பளு குறையும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி லாபத்தை பெருக்குவீர்கள். பணியிடத்தில் எதிரிகள் தொல்லை அகலும். .

இல்லத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக அகலும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விலையுர்ந்த ஆபரணங்களை வாங்கும் யோகம் இருக்கின்றது. சிலருக்கு பூமி தொடர்பான பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் இருக்கின்றது. உடல் உபாதைகள் வரக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள்.

கடகம்:

அன்புள்ள கடகம் ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி பெறும்  மாதமாக இருக்க போகின்றது. பஞ்சம ஸ்தானத்தில் இருக்கின்ற குரு பகவான் உங்களது ராசியை பார்ப்பதால் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். குரு சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகி இருக்கின்றார். குரு அஸ்தமனம் ஆகி இருந்தாலும் அவர் பார்க்கும் இடத்திற்கு ஓரளவு பலன் உண்டு. உங்கள் ராசியில் இருந்து குருவின் பார்வை 9,11 ஆகிய இடங்களில் பதிவால் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

உங்கள் ராசிக்கு 3,12-ம் இடங்களின் அதிபதியான புதன் பகவான் டிசம்பர் 8-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். உங்களது பிள்ளைகள் சம்மந்தமாக சுப செய்தி வரக்கூடும். பிறர் செய்ய தயங்கும் காரியங்களை நீங்கள் சவாலாக எடுத்து கொண்டு முடித்து காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உங்கள் வெற்றிக்கு துணை புரியும்.

உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சுக்கிரன் வலுவாக துலாம் ராசியில் இருப்பதால் இடம், பூமி வாங்கும் யோகம் இருக்கின்றது. தாயார் மற்றும் அவரது வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அனுபவமிக்க நபர்களின் ஆலோசனையால் ஒரு பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம், வீடு மாற்றம் உண்டாகும்.

செய்கின்ற வேலையில் திடீர் மாற்றங்கள் உண்டாகும். வேலை விஷயமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். புதிய வேலைக்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். வியாபாரிகளுக்கு கணிசமான லாபம் வரக்கூடும். வருங்காலம் கருதி எடுக்கின்ற முயற்சிகளில் யாவும் வெற்றி கிட்டும். மொத்தத்தில் கடகம் ராசியினர்களுக்கு இந்த டிசம்பர் மாதம் சுபச்செலவுகள் அதிகரிக்கின்ற மாதமாக இருக்க போகின்றது.

சிம்மம்:

அன்புள்ள சிம்மம் ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் திறமையை நிரூபித்து சாதித்து காட்டும் மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிநாதன் சூரியன் நான்காம் இடத்தில் இருப்பதால் அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்று ஆக்கபூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள். குரு சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகி இருக்கின்றார். எனவே முடியாது என்று இருந்த விஷயங்கள் இப்பொழுது முடிந்து விடும். கல்யாண வரன் தேடி கொண்டு இருப்பவர்களுக்கு திடீரென முடிந்து விடும்.

சுக்கிரன் வலுவாக சொந்த வீடான துலாம் ராசியில் இருப்பதால் இல்லத்தில் குதூகலமாக காணப்படுவீர்கள். உங்களது எதிர்காலம் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்க ஏற்ற நேரமாகும். வியாபாரத்தில் உங்களது நவீன விளம்பர உத்திகளை பயன்படுத்தி லாபத்தை பெருக்குவீர்கள். அலுவலத்தில் உங்களது தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டி சாதித்து காட்டுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சவாலான காரியங்களை மிக எளிதில் முடித்து காட்டுவீர்கள்.

உங்கள் ராசிக்கு 2,11-ம் இடங்களின் அதிபதியான புதன் பகவான் டிசம்பர் 8-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். புதன் குருவோடு இணைந்து நான்காம் இடத்தில் இருக்கும் பொழுது தாராளமான பணவரவு உண்டாகும். முடங்கி கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

உடன்பிறந்தவர்கள் உங்களை நாடி வந்து உதவி கேட்பார்கள். நவீன தகவல் தொடர்பு சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நினைத்த ஒரு காரியம் இப்பொழுது நடைபெறும். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் பூமியால் லாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். சிலருக்கு தூக்கமின்மை, அனாவசியமான கற்பனைகள் இரவு நேரத்தில் கனவு தொல்லையாக உருவெடுத்து நிம்மதியான உறக்கத்தினை கெடுக்கும்.

கன்னி:

அன்புள்ள கன்னி ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் புதிய வாய்ப்புகள் வருகின்ற மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாக செயல்புரிவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

புதன் பகவான் டிசம்பர் 8-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். உங்களது ராசிநாதன் புதன் பலம் பெற்று வலுவாக இருக்கும் பொழுது எண்ணற்ற நற்பலன்கள் உண்டாகும். மனதில் தெளிவு பிறக்கும். சாமர்த்தியமாக பேசி பல நல்ல காரியங்களை சாதித்து காட்டுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கக்கூடும். சிலருக்கு புதிய வாய்ப்புகளும், பொறுப்புகளும் தேடி வரக்கூடும்.

வியாபாரத்தில் இருந்த வந்த மந்த நிலை மாறி சூடு பிடிக்க தொடங்கும். பணியிடத்தில் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மற்றும் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உங்களது காரியங்களை எளிதில் சாதித்து கொள்வீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்கின்ற பொறுப்புகளை நீங்கள் மீண்டும் திரும்பவும் செய்யும் படியான நிலை உருவாகும்.

இல்லத்தில் இருப்பவர்களுடன் விட்டு கொடுத்து செல்லுங்கள். அனாவசிய வாக்குவாதங்களை தவிர்த்திடுங்கள்.  பிள்ளைகளால் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் உங்களது மேற்பார்வையில் வைத்து கொள்வது நன்மை தரும். அஜீரண கோளாறு, வயறு சம்மந்தமான பிரச்சனை, சளி தொந்தரவு ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள்.

இம்மாதம் சுப விரயம் அதிகரிக்கின்ற மாதமாக இருக்கக்கூடும். இல்லத்தில் ஆடம்பர பொருட்களையும் அத்தியாவசி பொருட்களையும் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருக்கும் குரு சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகி இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 4,7-ம் இடங்களின் அதிபதியான குரு கேந்திராதிபத்யதோஷம் பெற்று வலிமை இழக்கும் பொழுது நற்பலன்களை கொடுப்பார். தாராளமான தனவரவு வந்து கொண்டே இருந்தாலும், செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும்.

துலாம்:

அன்புள்ள துலாம் ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் உற்சாகம் நிறைந்த மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் வலுவாக இருப்பதால் நினைத்த காரியத்தை நினைத்தபடி முடித்து காட்டுவீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே  அன்பு அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கக்கூடும். வியாபாரத்தில் கணிசமான லாபம் வரக்கூடும்.

லாப ஸ்தானத்தின் அதிபதியான சூரியன் இரண்டாம் வீட்டில் இருப்பதால் தாராளமான பணவரவு வரக்கூடும். சிலருக்கு உபரி வருமானம் பெருகும். தங்கம்,வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தன ஸ்தானத்தில் இருக்கும் குரு சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகி இருக்கின்றார். குரு அஸ்தமனம் ஆகி இருப்பதால் எதிரிகள் தொல்லைகள் அகலும். குரு உங்கள் ராசிக்கு 3,6-ம் வீட்டின் அதிபதி என்பதால் உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு கருத்து வேறுபாடு தோன்றி மறையக்கூடும்.

பஞ்சமஸ்தானத்தில் செவ்வாய் சாதகமாக இருப்பதால் இல்லத்தில் இருப்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறக்கூடும். அனாவசிய செலவுகளை தவிர்த்து கொள்ளுங்கள். நீண்ட தூர பயணத்தின் பொழுது பொருள் இழப்பு ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தோள் சம்மந்தமான பிரச்சனை, உடலில் உஷ்ணம் போன்றவை ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசிக்கு 9,12-ம் இடங்களின் அதிபதியான புதன் பகவான் டிசம்பர் 8-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். இதன் விளைவாக மனம் தெளிவு அடையும். தேவையற்ற பயம், சிந்தனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களை உதாசீனப்படுத்திய உறவினர்கள்  உங்களோடு இணைந்து நட்பு பாராட்டுவார்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்ல வாய்ப்பு வரக்கூடும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டு இருந்த சலுகைகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு இப்பொழுது கிடைக்கும்.

விருச்சிகம்:

அன்புள்ள விருச்சிகம் ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் சமயோஜித  புத்தியால் வெற்றி பெறும் மாதமாக இருக்க போகின்றது. மாத தொடக்கத்தில் சூரியன் ஜென்மத்தில் இருக்கும் பொழுது செயலில் வேகமும், விவேகமும் உண்டாகும். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் அதில் முழு முயற்சியுடன் செயல் புரிவீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் நான்காம் இடத்தில் இருந்து கொண்டு உங்களது தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் எடுக்கின்ற காரியங்களில் வெற்றி உண்டாகும். அலுவலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள், ஊதிய உயர்வு, இடமாற்றம் உண்டாகும்.

ஜென்மத்தில் இருக்கும் குரு சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகி இருக்கின்றார். எனவே எந்த ஒரு காரியத்தை மற்றவர்களுக்கு கொடுத்தாலும் மீண்டும் உங்களிடம் ஒப்படைப்பார்கள். உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை புலப்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். உங்களது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

வெளிநாட்டில் இருந்து அனுகூலமான செய்தி வரக்கூடும். ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தீட்டும் திட்டங்கள் நல்ல விதமாக முடிவடையும். சிலருக்கு இனம் புரியாத கலக்கம் நிம்மதியான உறக்கத்தை கெடுக்கும். அவ்வப்பொழுது மறைந்த முன்னோர்களின் பற்றிய சிந்தனைகள் மனதிற்குள் எட்டிப்பார்க்கும்.

உங்கள் ராசிக்கு 8,11-ம் இடங்களின் அதிபதியான புதன் பகவான் டிசம்பர் 8-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். ஜென்மத்தில் புதன் வலுவாக இருக்கும் பொழுது பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். உங்களது திறமைகள் பளிச்சிடும். கல்யாண சம்மந்தமான பேச்சுவார்த்தை நல்ல விதமாக முடிவடையும். குறிப்பாக உங்களது மகளுக்கு அல்லது மகனுக்கு இன்னும் எவ்வித சுப காரியம் நடைபெறவில்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும்.

தனுசு:

அன்புள்ள தனுசு ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் விரயங்கள் அதிகரிக்கின்ற மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிக்கு பதினோராம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் படிப்படியான முன்னேற்றங்கள் வந்து சேரும். சொத்து சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல விதமாக முடிவடையும். விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும். புதிய வேலைக்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும்.

உங்கள் ராசிக்கு 7,10-ம் இடங்களின் அதிபதியான புதன் பகவான் டிசம்பர் 8-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். செய்கின்ற தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கக்கூடும். உங்களது வாழ்க்கை  துணை வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம், வீடு மாற்றம்  கூட உண்டாகக்கூடும்.

உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கும் குரு சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகி இருக்கின்றார். கேந்திரதிபதி அஸ்தமனம் ஆகி இருப்பது நன்மை என்றாலும், குரு உங்களது ராசிநாதன் என்பதால் ஆரோக்கியத்தில் தொல்லைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். பயணங்களால் வீண் விரயங்கள் உண்டாகும்.

ஜென்மத்தில் சனி பகவான், இரண்டாம் இடத்தில் கேது, எட்டாம் இடத்தில்  ராகு, ராசிநாதன் குரு அஸ்தமனம் ஆகி 12-ம் இடத்தில் இருப்பதால் எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் சற்று போரட்டங்களையும், சவால்களையும் சமாளித்து முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். வாகனத்தை இயக்கும் பொழுது கவனத்துடன் செல்லுங்கள். கைகால்களில் வலி, மூட்டுவலி பிரச்சனைகள் உண்டாகும். மேலும் உங்கள் கிரக பாதிப்புகளில் இருந்து விடப்பட, நல்லவை நடைபெற அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று விநாயகரை வழிபட வேண்டும்.

மகரம்:

அன்புள்ள மகரம் ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் உழைப்பால் வெற்றி பெறும் மாதமாக இருக்க போகின்றது. இம்மாதம் நினைத்த காரியத்தை முடித்து காட்ட விடாமுயற்சியுடன் செயலில் ஈடுபடுவீர்கள். ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இல்லத்தில் இருப்பவர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். புதன் பகவான் டிசம்பர் 8-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கு ஏற்ற நேரமாக இருக்கின்றது. விலகிய சொந்த பந்தங்கள் மீண்டும் இணைவார்கள்.

விரயச்சனி தொடர்வதால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். உங்களுக்கு ஏற்படுகின்ற செலவுகளை சுப விரயங்களாக மாற்றி கொள்ள வேண்டும். செவ்வாய் வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. முன்கோபத்தை கட்டு படுத்தி கொள்ளுங்கள்.

குரு சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகி இருக்கின்றார். உங்கள் எட்டாம் அதிபதியான சூரியனும், பன்னிரண்டாம் அதிபதியான குருவும் இணைந்து இருப்பதால் விபரீத ராஜயோகம் உண்டாகும். செய்கின்ற தொழிலில் எதிர்பாராத விதமாக முன்னேற்றத்தை அடைவீர்கள். அலுவலகத்தில் உங்களது திறமைகள் பளிச்சிடும். செய்கின்ற தொழில் ரீதியாக மிகுந்த நற்பெயரும், பாராட்டும், சலுகைகளும் கிடைக்கும். சிலருக்கு வேலை விஷயமாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

இரவினில் கனவுத்தொல்லை அதிகரித்து தூக்கமின்மை ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். கல்யாண கனவு நனவாகும். வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கின்றது. புதிய முயற்சிகள் நல்ல விதமாக முடிவடையும்.தாராளமான தனவரவு வரக்கூடும் என்பதால் ஏதேனும் ஒரு சேமிப்பு திட்டத்தில் உங்களது பணத்தை போட்டு வையுங்கள். பிள்ளைகளை உங்களது மேற்பார்வையில் வைத்து கொள்வது நல்லது.

கும்பம்:

அன்புள்ள கும்பம் ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் வாழ்க்கையில் வளர்ச்சி காணும் மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசியில் செவ்வாய் இருப்பதால் சுறுசுறுப்புடன் செயல்புரிவீர்கள். உங்கள் ராசிக்கு 3,10-ம் இடங்களின் அதிபதியாக செவ்வாய் இருப்பதால் தொழில் ஸ்தானம் நல்ல வளர்ச்சி அடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். நல்ல தனவரவு வரக்கூடும்.

புதன் பகவான் டிசம்பர் 8-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். இல்லத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். போட்டிகளில் கலந்து கொண்டு பரிசும் பெறுவார்கள். உங்களது மகனுக்கு அல்லது மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையக்கூடும். இல்லத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.

குரு சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகி இருக்கின்றார். குரு பகவான் 10-ம் இடத்தில் அஸ்தமனம் ஆகி இருப்பதால் எவ்வித பிரச்சனைகளும் உண்டாகாது. புதிய பொறுப்புகள் தேடி வரக்கூடும். சமூகத்தில் உங்களது அந்தஸ்து, பெயர், புகழ் உயரும்.

உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் கைநழுவி சென்ற வாய்ப்புகள் இப்பொழுது கைகூடி வரக்கூடும். வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கின்றது. கல்யாண முயற்சி நல்ல விதமாக முடிவடையும். உங்களது வாழ்க்கை துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். அவர்களது ஆலோசனையால் காரிய அனுகூலம் உண்டாகும்.

ஆறாம் இடத்தில் ராகுவினால் சிறு சிறு பிரச்சனைகள் வரக்கூடும். உங்கள் ராசிநாதன் சனி பகவான் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் மகிழ்ச்சியும், சங்கடங்களும் மாறி மாறி வரக்கூடும். சுயஜாதகத்தில் சனி பகவான் பலமாக இருந்தால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது.

மீனம்:

அன்புள்ள மீனம் ராசியினர்களே, இந்த டிசம்பர் மாதம் கூட்டு முயற்சியால் வெற்றி பெறும் மாதமாக இருக்க போகின்றது. இம்மாதம் மீனம் ராசியினர் நினைத்த காரியத்தை நினைத்தபடி முடித்து காட்டுவீர்கள். சனி பகவான் 10-ம் இடத்தில் வலுவாக இருப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்புகளும், பதவியும் தேடி வரக்கூடும்.

குரு சூரியனோடு இணைந்து அஸ்தமனம் ஆகி இருக்கின்றார். உங்களது ராசிநாதன் குரு ஒன்பதாம் இடத்தில் அஸ்தமனம் ஆகி இருப்பதால் தன்னிச்சையாக எந்த வித காரியத்திலும் ஈடுபட வேண்டாம். அடுத்தவர்களின்  துணை கொண்டு செய்யும் காரியங்கள் வெற்றி அடையும். பண விஷயத்தில் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

உங்கள் ராசிக்கு 4,7-ம் இடங்களின் அதிபதியான புதன் பகவான் டிசம்பர் 8-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி விருச்சிகம் ராசிக்கு செல்கின்றார். புதன் பகவான் ஒன்பதாம் இடத்திற்கு வரும் பொழுது உங்களுக்கு திடீர் திருப்பங்களும், மாற்றங்களும் உண்டாகும். தெளிவான பாதை புலப்படும். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

இல்லத்தில் இருப்பவர்களுடன் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். திருமண தடைகள் நீங்கி நல்ல வரன் அமையக்கூடும். செவ்வாய் 12-ம் இடத்தில் இருப்பதால் சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும்.

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்புகள் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். பணியிடத்தில் சில தடைகள், குறுக்கீடுகள் வரலாம். அரசு வேலைக்காக முயற்சி செய்கின்றவர்களுக்கு  நல்ல செய்தி வரக்கூடும். மொத்தத்தில் மீனம் ராசியினருக்கு வெற்றி காணும் மாதமாக இருக்க போகின்றது.

From around the web