மகரம் நவம்பர் மாத இராசி பலன் 2020!
 

மகர ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான சுழல் உருவாகும். வியாபாரம் ஏற்றம் இறக்கமாக காணபடும். நினைத்து ஒன்று, நடந்தது ஒன்று என இந்த மாதம் செல்லும். புதிய முயற்சிகள் கை கூடாது. 

வீட்டில் அடுத்தடுத்த சுப காரியங்கள் நிகழும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கும் நேரத்தை அதிகமாக செலவிடுங்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வ பிரார்த்தனையை நிறைவு செய்வீர்கள். 

மன கவலைகள் வந்து மறையும். வேலையில் பணிசுமை  அதிகமாக இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிப்படைய கூடும். 

தேவையான கடனுதவி விரைவில் கிடைக்கும். மூத்த சகோதரர் வழியில் சற்று அலைச்சல் உண்டாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சனி கிழமைகளில் விஷ்ணுவை வழிபட்டு நெய் தீபம் ஏற்றவும் நன்மை உண்டாகும். 

வாகனத்தில் செல்லும் போது அதிக கவனம் தேவை. பணிகளில் உயர் அதிகாரிகள் உங்களின் யோசனைகளை  ஏற்றுகொள்வார்கள்.  சிலருக்கு வெளி நாட்டு உத்யோகம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சம்பள பாக்கிகள் கைக்கு வரும். தொழிலில் பங்குதாரர்களை மாற்ற வேண்டிய சூழல் உருவாகும்.  நில பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உகந்த நேரம் கை கூடும். 

From around the web