கும்பம் நவம்பர் மாத இராசி பலன் 2020!
 

கும்ப ராசிக்கான நவம்பர் மாத ராசி பலன்கள் எப்படி உள்ளது என்று இப்போது பார்க்கலாம்.
 
 

கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் கலையும். குடும்பத்தில் ஒன்றுமை உண்டாகும். பெண்களுக்கு திருமண காரியம் விரைவில் நடக்கும். 

வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். புதிய வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உருவாகும். 

சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குழந்தைகளால்  பெருமை உண்டாகும். தடைபட்டு வந்த கட்டுமான பணிகள் மீண்டும் நடை பெறும். 

வெளியூர் பயணங்களை தவிர்த்தால் வரும் தீமையில் இருந்து விலக முடியும்.  எதை செய்தாலும் இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தும்  விரைவில் நடக்கும்.  

இந்த மாதம் சிறப்பாக இருப்பதால் மனதில் இருந்த  தாழ்வு மனப்பான்மை மற்றும் பயம் அகலும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். சின்னச் சின்ன  நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் சற்று கவனமுடன் இருத்தல் வேண்டும். 

வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் காலபைரவரை வழிபட்டால் செய்யும் செயலில் தடை இல்லமால் நடைபெறும். சகோதரர் வழியில் பண உதவி கிடைக்கும்.  

பெண்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருப்பதால் பணியில் உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திறமையை வெளிப்படுத்தி பலரது பாராட்டையும் நற்பெயரையும் பெறுவீர்கள். 
 

From around the web