குழந்தைக்கு பேச்சு வர அரிய ஆன்மிக தீர்வுகள்

 
திருஞானசம்பந்தர்

சில குழந்தைகளுக்கு சீக்கிரம் பேச்சு வராது இதற்காக கோவில் கோவிலாக அலைவார்கள். இருப்பினும் எல்லாவற்றுக்கும் இறைவன் ஒரு தீர்வை கொடுக்கிறான். குழந்தைக்கு உரிய வயது வந்தும் பேச்சு வராதவர்கள், திக்கு வாய் குழந்தைகள் உள்ளவர்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதர் கோவிலில் வேண்டிக்கொள்வார்கள் ஏனென்றால் திருஞானசம்பந்தருக்கு அம்பிகையே பால் கொடுத்த இடம் இது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பர் சமாதி மண்ணை எடுத்து குழந்தைக்கு நாக்கில் தடவி வருவார்கள். ஏனென்றால் கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற பழமொழிக்கேற்ப கம்பர் ஜீவசமாதியான மண்ணை எடுத்து தடவினால் கூட குழந்தைக்கு சீக்கிரம் பேச்சு வந்து விடும் என சொல்வதுண்டு. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் இவரது ஜீவசமாதி உண்டு.

இது போல குழந்தைக்கு பேச்சு வராமை, திக்கு வாய் போன்றவற்றுக்கு பேச்சுத்திறமை சிறக்க திருவாசகத்தில் உள்ள திருச்சாழல் பதிகத்தை தொடர்ந்து பாடி வரவேண்டுமாம்.

From around the web