ராகு தோஷத்திற்கு எளிய பரிகாரம்

ராகு தோஷத்திற்கு மிக எளிய உளுந்து பரிகாரம்
 
ராகு தோஷத்திற்கு எளிய பரிகாரம்

நிழல் கிரகங்களான ராகு கேது மனிதர்களின் வாழ்வில் துன்பத்தை அதிகம் ஏற்படுத்துகின்றன. ராகுவால் எதிர்பாராத பணவரவும் கேதுவால் நல்ல ஞானமும் கிடைத்தாலும் இல்வாழ்க்கையில் இந்த இரண்டு கிரகங்களும் வேறு பல பிரச்சினைகளை ஏற்படுத்தி நம்மை மன நிம்மதியில்லாமல் ஆக்கி விடுகின்றன.

தினமும் இரவில் தூங்கும்போது கொஞ்சம் உளுந்தை எடுத்து தலையணையின் கீழ் வைத்து படுத்து உறங்கி விட்டு காலையில் எழுந்ததும் அந்த உளுந்தை எடுத்து தலையை சுற்றி காகத்திற்கு போடவும். இப்படி 9 தினங்கள் செய்து முடித்து விட்டு சிவாலயம் சென்று சிவனை வழிபட வேண்டும்.

இதனால் ராகு கொடுக்கும் துன்பங்கள் குறையும்.

From around the web