வெள்ளிக்கிழமை ராகு கால பரிகாரம்

ராகு கால பரிகாரம் பற்றிய விளக்கம்
 

பொதுவாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பரிகாரம் புகழ்பெற்றது . ராகு காலத்தில் செய்யும் பரிகாரம் மிக விசேஷமானது. ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு கோவில்களில் எலுமிச்சை விளக்கு, நெய்விளக்கு போன்றவற்றை ஏற்றி வழிபடுவார்கள் . வாழ்வில் தீராத திருமண தடை, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளுக்கு ராகு கால விளக்கு ஏற்றும் பரிகாரம் சிறந்தது.

வெள்ளிக்கிழமைகளில் 10.30 முதல் 12 மணி வரை வரும் ராகு காலம் சிறந்த நேரம் ஆகும். இந்த நேரங்களில் துர்க்கையோ இல்லை அம்மன் வடிவங்களில் இருக்கும் எந்த ஒரு நமக்கு இஷ்டமான பெண் தெய்வத்தின் வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். உதிரி பூக்கள் கொஞ்சம் வாங்கி நமக்கு பிடித்த தெய்வத்தின் படத்தை முன்னால் வைத்து அந்த தெய்வத்தின் மூல மந்திரத்தை 1008 முறை சொல்லி( ராகு கால நேரத்திற்குள்) ஏதாவது வீட்டில் சிம்பிளாக ஒரு பட்சணம் செய்து அதை படைத்து ஒவ்வொரு வாரமும் வழிபட்டு வாருங்கள். நீங்கள் என்ன காரணத்திற்காக வேண்டுதல் செய்யுறிங்களோ அதில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

From around the web