பிரசன்ன ஜோதிடம் ஒரு பார்வை....

ஒருவருக்கு பிரசன்ன ஜோதிடம் எப்படி பார்க்கப்படுகிறது என்றால் ஒருவர் ஜோதிடம் பார்ப்பவரிடம் சென்று ஜோதிடம் பார்க்கும் போது அந்த நேரத்தில் அவர் ராசி இருக்கும் கிரக நிலைகளை வைத்து அவருக்கு ஜோதிடம் கணித்து கூறப்படுகிறது.

நாம் பிறக்கும் போதே நாம் எப்படி வாழப் போகிறோம் என்று கிரக நிலைகளே தீர்மானித்து விடுகின்றன. அதாவது நம் வாழ்க்கையே கிரக நிலையில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படி இந்த கிரக நிலைகளை வைத்து தான் ஜோதிடம் கணிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் பல வகையான பிரிவுகள் உள்ளன என்பதை நாம் முன் கூட்டியே பார்த்தோம். மேலும், கைரேகை ஜோதிடத்தில் உள்ள ரேகைகள் அனைத்தையும் பார்த்தோம்.

தற்போது கைரேகை ஜோதிடத்தை ஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்று நாம் ஜோதிடத்தின் ஒரு பிரிவான பிரசன்ன ஜோதிடம் பற்றிப் பார்ப்போமா.....

ஒருவருக்கு பிரசன்ன ஜோதிடம் எப்படி பார்க்கப்படுகிறது என்றால் ஒருவர் ஜோதிடம் பார்ப்பவரிடம் சென்று ஜோதிடம் பார்க்கும் போது அந்த நேரத்தில் அவர் ராசி இருக்கும் கிரக நிலைகளை வைத்து அவருக்கு ஜோதிடம் கணித்து கூறப்படுகிறது.

அதாவது அவர் ஜோதிடம் பார்க்கும் நேரத்தில் உள்ள கிரக நிலையை வைத்து அவரது வாழ்வில் ஏற்படும் இன்ப, துன்பங்கள் பற்றி இந்த பிரசன்ன ஜோதிடம் மூலம் அறியலாம்.

இந்த பிரசன்ன ஜோதிடம் உண்மையாகவே சாத்தியமா என்று கேட்டால் நான் சொல்வேன் சாத்தியம் தான்.  எனவே எல்லா ஜோதிடம் போல பிரசன்ன ஜோதிடமும் உண்மையைத் தான் கூறுகின்றது.

From around the web