முன்னோர் தோஷம் நீக்கும் பரிதியப்பர் கோவில்

ஜாதகத்தில் இருக்கும் பித்ரு தோஷம் நீக்கும் பரிதியப்பர் கோவில்
 
முன்னோர் தோஷம் நீக்கும் பரிதியப்பர் கோவில். ஜாதக ரீதியாக முன்னோர்கள் செய்த தவறினால் நமக்கு நிறைய தோஷங்கள் இருக்கும்.

ஜாதக ரீதியாக முன்னோர்கள் செய்த தவறினால் நமக்கு நிறைய தோஷங்கள் இருக்கும். மேலும் முன்னோர்களுக்குரிய சரியான வழிபாடுகளை செய்யாததாலும் அந்த தோஷங்கள் பெருகி வாழ்வில் நிறைய தடைக்கல்லை ஏற்படுத்தும். அப்படி இருப்பவர்கள் ராமேஸ்வர்ம், கயா, காசி என பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வழிபாடு செய்வார்கள்.

இவை தவிர்த்து சில கோவில்கள் தமிழ்நாட்டில் உள்ளது அதில் முக்கியமானது தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை அருகில் உள்ள பரிதியப்பர் கோவில் ஆகும்.

பாடல் பெற்ற தென்கரை தலங்கள் வரிசையில் இந்த தலம் 101வது தலமாகும்.  தனது தோஷம் நீங்க சூரியன் வழிபட்ட கோவில்களில் இதுவும் ஒன்று ஜாதகத்தில் பித்ருகாரகன் என அழைக்கப்படுபவர் சூரியன். அந்த சூரியன் வழிபட்டு தன் தோஷம் நீங்கப்பெற்ற ஸ்தலம் என்பதால் முன்னோர்கள் தோசம் என அழைக்கப்படும் பித்ரு தோஷம் இந்த தலத்திற்கு வந்தால் நீங்குகிறது என அர்த்தம்.

சூரியனுக்கு பரிதி என்ற பெயர் உள்ளது. சூரியன் வழிபட்டு தனது குன்ம நோய் நீங்கப்பெற்றதால் இத்தல இறைவன் பரிதியப்பர் என அழைக்கப்படுகிறார்.

எத்தகைய பிதுர்தோஷத்துக்கும் இந்த கோவிலுக்கு வந்தால் அதற்கு சரியான தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒருமுறை வந்து சிவனையும் அம்பாளையும் வணங்கி சென்றால் ஜாதகரீதியாக அனைத்து பிதுர்தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

From around the web