நவம்பர் மாத ராசி பலன் 2018!

மேஷம்: அன்புள்ள மேஷம் ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம் தொட்டதெல்லாம் துலங்கும் மாதமாக இருக்க போகின்றது. உங்களது ராசிநாதன் செவ்வாய் பகவான் நவம்பர் 6-ம் தேதி கும்பம் ராசியில் சஞ்சரிக்க போகின்றார். பதினோராம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் திடீர் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரம், சிறு தொழில் செய்கின்றவர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலமாக இருக்க போகின்றது. பணியிடத்தில் புதிய பதவிகள், பொறுப்புகள் வரக்கூடும். உங்களது அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் குரு
 
November matha rasi palan 2018

மேஷம்:

அன்புள்ள மேஷம் ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம் தொட்டதெல்லாம் துலங்கும் மாதமாக இருக்க போகின்றது. உங்களது ராசிநாதன் செவ்வாய் பகவான் நவம்பர் 6-ம் தேதி கும்பம் ராசியில் சஞ்சரிக்க போகின்றார். பதினோராம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் திடீர் யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரம், சிறு தொழில் செய்கின்றவர்களுக்கு  நல்ல முன்னேற்றமான காலமாக இருக்க போகின்றது. பணியிடத்தில் புதிய பதவிகள், பொறுப்புகள் வரக்கூடும்.

உங்களது அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் 2,12-ம் வீட்டை பார்ப்பதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கக்கூடும். உங்களது மகள் அல்லது மகன் சம்மந்தமாக சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். சூரியன் நவம்பர் 17-ம் தேதி விருச்சிகம் ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். குருவுடன் சூரியன் புதன் இணைந்து எட்டாம் இடத்தில் இருப்பதால் சற்று நிதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டிய நேரமாக இருக்கின்றது. எந்த ஒரு காரியம் செய்வதற்கு முன் பல முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரக்கூடும். சிலருக்கு திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமையக்கூடும். சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தில் இருந்த வந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்க்கமான முடிவினை எடுப்பீர்கள். நவம்பர் 16-ம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தி ஆகின்றார். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சில பணிகளை மற்றவர்களை சார்ந்து முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். சரியான நேரத்தில் தகுந்த நபர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள்.

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

ரிஷபம்:

அன்புள்ள ரிஷபம் ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம் உங்களுக்கு அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் ஏற்படுகின்ற மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிக்கு குருவும் புதனும் இணைந்து நற்பலன்களை தருவர். சொந்த பந்தங்கள் உங்களை தேடி வருவார்கள். இல்லத்தில் சுபவிசேஷ பேச்சுவார்த்தைகள் நல்ல விதமாக முடிவு பெறும். உங்கள் பிள்ளைகள் சம்மந்தமாக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

நவம்பர் 6-ம் தேதி கும்பம் ராசியில் அதாவது உங்களது ஜீவனஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பணியிடத்தில் உங்களது திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டும் பெறுவீர்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. நீண்ட நாட்களாக தொழில் விரிவாக்கம், புதிய வியாபாரம் தொடங்குவது என்று தடைபட்டு கொண்டு இருந்த விஷயங்கள் நல்ல படியாக முடிவடையும். சரியான வேலை அமையாமல் இருந்தவர்களுக்கு நல்ல தெளிவான பாதை புலப்படும்.

சூரியன், நவம்பர் 17-ம் தேதி விருச்சகம் ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். சூரியன் குருவுடன் இணைந்து இருப்பதால் அரசு சம்மந்தமான காரியங்கள் நல்ல விதமாக முடிவடையும். உங்களது ராசிக்கு யோகம் தரக்கூடிய சனி பகவான் நவம்பர் 26-ம் தேதி மூலம் நட்சத்திரத்தில் இருந்து பூராடம் நட்சத்திரம் செல்வதால் புதிய வாய்ப்புகள் வரக்கூடும். இதுவரை பல வித இழப்புகள், இன்னல்கள் சந்தித்த ரிஷபம் ராசியினர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைவீர்கள்.

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நவம்பர் 16-ம் தேதி வக்ர நிவர்த்தியாகி ஆறாம் இடத்தில் இருப்பதால் சாதகமான பலன்களை கொடுப்பார். மாத பிற்பாதியில் புதன் வக்ரம்  அடைவதால் அனாவசிய விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்திடுங்கள். பேச்சில் கவனம் தேவை. வீண் வம்பு, சண்டை, சச்சரவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சற்று நிதானத்தை கடைபிடியுங்கள். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெரும் மாதமாக இருக்கப் போகின்றது.

மிதுனம்:

அன்புள்ள மிதுனம் ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காணும் மாதமாக இருக்க போகின்றது. உங்கள் ராசிக்கு 7,10-ம் இடங்களின் அதிபதியான குரு பகவான் உங்கள் ராசிநாதன் புதனோடு இணைந்து ஆறாம் வீட்டில் இருப்பதால் அதிர்ஷ்டமான மாதமாக இருக்க போகின்றது. மாத பிற்பகுதியில் புதன் வக்ரம் அடைவதால் சிறு இடைஞ்சல்களை சந்திப்பீர்கள். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள்.

நவம்பர் 6-ம் தேதி கும்பம் ராசியில் அதாவது உங்களது ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் இருக்கும் பொழுது பிரச்சனைகள் படிப்படியாக விலகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறைந்து ஒற்றுமை புலப்படும். ஏழாம் இடத்தில் இருக்கும் சனி பகவான் மூன்றாம் பார்வையாக செவ்வாய்யைப் பார்ப்பதால் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கக்கூடும். எதையும் சமாளிக்கின்ற ஆற்றல் பிறக்கும்.

மாத தொடக்கத்தில் சூரியன் நீசம் பெற்ற சுக்கிரனோடு இணைந்து ஐந்தாம் வீட்டில் இருப்பதால் தேவையற்ற  மனக்குழப்பங்கள் வரக்கூடும். வருகின்ற நவம்பர் 17-ம் தேதி சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். சூரியனோடு குரு இணைந்து ஆறாம் இடத்தில் இருக்கும் பொழுது போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கொடுக்கின்ற பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடித்து காட்டுவீர்கள்

இல்லத்தில் அவ்வப்பொழுது சலசலப்பு தோன்றி மறையக்கூடும். உங்களது வாழ்க்கை துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். உங்களுக்கு தெளிவான முடிவினை எடுக்க வழிகாட்டுவார்கள். நவம்பர் 16-ம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தி ஆவதால் பிள்ளைகள் சம்மந்தமாக தடைபட்டு கொண்டு இருந்த விஷயங்கள் நல்ல விதமாக முடிவடையும். தேவையற்ற செலவுகள் மற்றும் முதலீடுகளைத் தவிர்த்திடுங்கள்.  தொழில் துறையில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் அதிகரிக்கக்கூடும். உங்களது கனிவான பேச்சாலும், மலர்ந்த முகத்தாலும் எதிர்கொண்டு வெற்றி காணும் மாதமாக இருக்கப் போகின்றது.

கடகம்:

அன்புள்ள கடகம் ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம் எதிர்பாராத வெற்றி பெறும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் புதனோடு இணைந்து விருச்சிகம் ராசியில் சஞ்சரிப்பதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். உங்களது அபார ஆற்றலால் சவாலான காரியங்களை மிக எளிதில் முடித்து காட்டுவீர்கள். மாத தொடக்கத்தில் புதன் சாதகமாக இருப்பதால் உற்றார், உறவினர்களின் விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

நவம்பர் 6-ம் தேதி செவ்வாய் கும்பம் ராசியில் சஞ்சரிப்பதால் சின்ன சின்ன விபத்துகள், காயங்கள் ஏற்படக்கூடும். செவ்வாய் எட்டாம் இடத்தில் இருக்கும் பொழுது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருக்கும் சனி பகவான் செவ்வாய்யைப் பார்ப்பதால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படக்கூடும்.

மாத தொடக்கத்தில் சூரியன் நான்காம் வீட்டில் இருப்பதால் தந்தை வழியால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரக்கூடும். அதன் பிறகு சூரியன் நவம்பர் 17-ம் தேதி விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியனோடு குரு, புதன் இணைந்து இருக்கும் பொழுது எதிர்பாராத வகையில் நன்மைகள் நடைபெறக்கூடும். குறிப்பாக உங்களது பிள்ளைகள் சம்மந்தமாக எந்த வித சுப நிகழ்வுகள் நடைபெறவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல செய்தி வரக்கூடும்.தள்ளி போன திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல விதமாக முடிவடையும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் இருக்கின்றது.

பணியிடத்தில் வேலைச்சுமை அதிகரிக்கக்கூடும். வீண் வாக்கு வாதங்களை தவிர்த்திடுங்கள். சிலருக்கு புதிய வேலை அமையக்கூடும். நவம்பர் 16-ம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தியாவதால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்குவீர்கள்.

சிம்மம்:

அன்புள்ள சிம்மம் ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம்  உங்களுக்கு புதிய பாதையில் சென்று சாதிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் சூரியன் மூன்றாம் இடத்தில் இருப்பதால் நினைத்த காரியங்களை எந்த ஒரு நிலையிலும் தள்ளி போடாமல் விரைந்து முடிப்பீர்கள். நவம்பர் 17-ம் தேதி சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். குருவுடன் சூரியன் இணைந்து இருக்கும் பொழுது யோகமான காலமாக இருக்கப் போகின்றது.

குரு சூரியன் இணைந்து உங்களது நான்காம் வீட்டில் இருப்பதால் செயலில் வேகத்தோடு விவேகமும் உண்டாகும். தெளிவான புதிய பாதையில் பயணித்து வெற்றி காணும் மாதமாக இருக்கப் போகின்றது. பணியிடத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்புகள், புதிய பதவி, சம்பள உயர்வு கிடைக்கும். தனவரவு சீராக இருக்கக்கூடும். சிலருக்கு புதிய இடத்தில் வேலை அமையக்கூடும். பிள்ளைகள் சம்மந்தமாக வெளியூர் அல்லது வெளிமாநிலம் செல்ல வேண்டிய சூழல் உருவாகும்.

உங்கள் ராசிக்கு 2,11-ம் இடங்களின் அதிபதியான புதன் குருவுடன் இணைந்து இருப்பதால் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கக்கூடும். குறிப்பாக தொழில், வியபாரம், கூட்டுத்தொழில் செய்கின்றவர்களுக்கு ஏற்றமான காலமாக இருக்கக்கூடும். உங்கள் ராசிக்கு 4, 9-ம் இடங்களின் அதிபதியான செவ்வாய் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சியாகின்றார். நவம்பர் 6-ம் தேதி கும்பம் ராசியில் செவ்வாய் இருப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல்பட தொடங்குவீர்கள். செவ்வாய் ஏழாம் பார்வை உங்களது ராசியின் மீது விழுவதால் திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமையக்கூடும். பேச்சில் நிதானம் தேவை.

சுக்கிரன் மூன்றாம் இடத்தில் சாதகமாக இருப்பதால் உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகும். நவம்பர் 16-ம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தி ஆகின்றார். நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த பணத்தொகை கைக்கு வரக்கூடும்.

கன்னி:

அன்புள்ள கன்னி ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம் புகழும் கௌவரமும்  கூடும் மாதமாக இருக்கப் போகின்றது. நவம்பர் 6-ம் தேதி கும்பம் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் தன்னிச்சையாக செயல்பட்டு முக்கியமான  முடிவுகளை எடுத்து சாதனை புரிவீர்கள். செவ்வாய் ஆறாம் வீட்டில் சாதகமாக இருப்பதால் போட்டிகள், பொறாமைகள், எதிரி தொல்லைகள் விலகும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் கூடுதலாக ஒரு தளம் அமைப்பீர்கள். இதுவரை கண்டு காணாமல் இருந்தவர்கள் உங்களுடன் மீண்டும் இணைவார்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

தாராளமான பணவரவு இருக்கக்கூடும். விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாத தொடக்கத்தில் சூரியன் 2-ம் வீட்டில் நீசம் பெற்ற சுக்கிரனோடு இருப்பதால் ஓரளவுக்கு பணிச்சுமை குறையும். அனாவசிய பேச்சுகள் பிரச்சனைகளை உண்டாக்கும் என்பதால் பேச்சில் கவனமும், நிதானமும் கடைபிடியுங்கள். வருகின்ற நவம்பர் 17- தேதி சூரியன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார். சூரியன் குருவுடன் இணைந்து இருப்பதால் புகழும் கௌவரமும் அதிகரிக்கக்கூடும்.

அரசு சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்களால் அவ்வப்பொழுது டென்ஷன் ஆவீர்கள். பணியிடத்தில் கூடுதலான பொறுப்புகளும், அலைச்சலும் இருக்கக்கூடும். நவம்பர் 16-ம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தியாவதால் வியாபாரத்தில் சூடு பிடிக்க தொடங்கும். மனைவி வழியால் நல்ல செய்தி உண்டு. குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல மழலை செல்வம் கிட்டும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்.

சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சளி தொல்லை, வயறு சம்மந்தமான பிரச்சனைகள் வரக்கூடும். உடன்பிறந்தவர்களிடம் விட்டு கொடுத்து போக வேண்டும். புதிய முதலீடு, வியாபாரத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும்.

துலாம்:

அன்புள்ள துலாம் ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம் உங்களது ஆளுமை திறன் புலப்படும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் உங்களது ராசியில் இருப்பதால் யோகமான பலன்களை தருவார். வருகின்ற 16-ம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தியாகும் பொழுது எதிர்பார்த்த பணத்தொகை கைக்கு வரக்கூடும். புதன் குருவுடன் இணைந்து இரண்டாம் வீட்டில் இருப்பதால் இல்லத்தில் சுப பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக முடிவடையும். உற்றார்,  உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உங்களை விட்டு விலகி சென்ற சொந்த பந்தங்கள் மீண்டும் இணைவார்கள். சகோதர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

மாத தொடக்கத்தில் உங்களது ராசியில் சூரியன் இருப்பதால் சற்று உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். பேச்சில் நிதானம் தேவை. சூரியன் நவம்பர் 17-ம் தேதி விருச்சிகம் ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். குருவுடன் சூரியன் புதன் இணைந்து உங்களது இரண்டாம் வீட்டில் இருப்பதால் எதிர்பாராத வகையில் நற்பலன்கள் உண்டாகும்.

நவம்பர் 6-ம் தேதி கும்பம் ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். ஐந்தாம் இடத்தில் செவ்வாய் இருக்கும் பொழுது திடீர் திருப்பங்கள் உண்டாகும். தாராளமான தனவரவு வரக்கூடும். உங்களது பிள்ளைகள் சம்மந்தமாக நல்ல செய்தி வரக்கூடும். ஏழாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் சாதகமாக இருப்பதால்  உங்கள் மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையக்கூடும்.

பணியிடத்தில் உங்களது திறமைகள் பளிச்சிடும். உங்களது ஆளுமை திறன் புலப்படும். புதிய வாய்ப்புகள் வரக்கூடும். குறிப்பாக பேச்சு துறை, எழுத்து துறை, மார்க்கெட்டிங், கலை துறை, மருத்துவத் துறை, வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலமாக இருக்கக்கூடும். எதிர்பார்த்த வேலை மாற்றம், இடமாற்றம் நல்லபடியாக அமையக்கூடும். நவீன சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

அன்புள்ள விருச்சகம் ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம்  உங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் செவ்வாய், நவம்பர் 6-ம் தேதி கும்பம் ராசியில் சஞ்சரிக்கின்றார். செவ்வாய் நான்காம் இடத்தில் சாதகமான வீட்டில் இருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். செவ்வாய் உங்களது தொழில் ஸ்தானத்தை பார்ப்பாதல் செய்கின்ற வேலையில் மாற்றங்கள் உண்டாகும். புதியதாக வேலைக்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும்

திருமணத் தடை நீங்கி நல்ல வரன் அமையக்கூடும். உங்களது மகளுக்கு அல்லது மகனுக்கு எந்த வித சுபகாரியங்கள் நிகழவில்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். இல்லத்தில் சுணக்கம் நீங்கி இணக்கம் உண்டாகும். உறவுகள் உங்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்களை அடையாளம் காண்பீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்து போடும் பொழுது சரிபார்த்து கொள்ளுங்கள்.

அலுவலகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். புதிய வாய்ப்புகள் வரக்கூடும் என்பதால் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாத தொடக்கத்தில் சூரியன் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் திடீர் பயணங்கள் உண்டாகும். வருகின்ற நவம்பர் 17-ம் தேதி சூரியன் உங்களது ராசியில் ஜென்ம குருவுடன் இணைந்து இருப்பதால் எதிலும் துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். அரசு சம்மந்தமான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி மேலோங்கும்.

நவம்பர் 16-ம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தி ஆகின்றார். சுக்கிரன் 12-ம் வீட்டில் இருப்பதால் வீண் விவாதங்களை தவிர்த்திடுங்கள். பெரிய முதலீடுகளை தவிர்த்திடுங்கள். இம்மாதம் முக்கியமான கிரகமான செவ்வாய் மாறும் பொழுது ஏதேனும் ஒரு வகையில் உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும்.

தனுசு:

அன்புள்ள தனுசு ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம் உங்களுக்கு தடைகளை தாண்டி வெற்றி அடைகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்களது பாக்கியாதிபதி சூரியன் மாத தொடக்கத்தில் துலாம் ராசியில் சுக்கிரனோடு இணைந்து இருப்பதால் எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள். பதினோராம் இடத்தில் சூரியன் இருக்கும் பொழுது அரசாங்கத்தாலும் அதிகார பதிவில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டாகும். நவம்பர் 6-ம் தேதி கும்பம் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கக்கூடும். மூன்றாம் இடத்தில் செவ்வாய் சாதகமாக இருப்பதால் சகதோர வகையில் பண உதவிகள் கிடைக்கும்.

வருகின்ற நவம்பர் 17-ம் தேதி சூரியன் விருச்சிகம் ராசியில் அதாவது பன்னிரண்டாம் வீட்டில் குருவோடு இணைந்து இருப்பதால் திடீர் பயணங்கள், விரயங்கள் உண்டாகும். சிறு வேலையை கூட போராடி தான் முடிக்க முடியும். சூரியன் சுய ஜாதகத்தில் பலமாக இருந்தால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. சிலருக்கு தூக்கமின்மை, கனவு தொல்லை, சளி சொந்தரவு  அதிகரிக்கக்கூடும்.

சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் தொடர்வதால் எந்த ஒரு காரியம் தொடங்கினாலும் அதில் போராடி தான் முடிக்க இயலும். சுய ஜாதகத்தில் சனியின் பலம், பார்வை, சேர்க்கை வைத்து பலன்கள் மாறுபடக்கூடும். செலவுகள் அடுத்தடுத்து இருந்தாலும் உங்களது முயற்சியால் வெற்றி காணும் மாதமாக இருக்க போகின்றது. பதினோராம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் வருகின்ற நவம்பர் 16-ம் தேதி வக்ர நிவர்த்தியாகும் பொழுது எதிர்பார்த்த பணத்தொகை கைக்கு வரக்கூடும்.

பணியிடத்தில் வேலைச்சுமை அதிகரிக்கக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கக்கூடும். கடின உழைப்பால் மட்டுமே கணிசமான லாபம் வரக்கூடும். பழைய கசப்பான நினைவுகள் அடிக்கடி வந்து போகக்கூடும். அதனை பற்றி சிந்தித்து கொண்டு இருக்காமல் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள். மேலும் மனம் தெளிவு அடைய வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை  வழிபாடு செய்யுங்கள்.

மகரம்:

அன்புள்ள மகரம் ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம் எதிர்பாராத விதமாக நன்மைகள் நடைபெறும் மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் ராசிக்கு 4, 11-ம் இடங்களின் அதிபதியான செவ்வாய் வருகின்ற நவம்பர் 6-ம் தேதி கும்பம் ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். உங்களது செயலில் வேகமும், விவேகமும் அதிகரிக்க கூடும். இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கக் கூடும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். வசதி வாய்ப்பு பெருகும். பணப்புழக்கம் அதிகரிக்க கூடும். கணவன் மனைவி இடையே அன்பு மேலோங்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

மாத தொடக்கத்தில் சூரியன் சுக்கிரனோடு இணைந்து பத்தாம் இடத்தில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பங்கு வர்த்தகம் மூலம் விரும்பிய லாபம் கிடைக்கும். சக தொழிலதிபர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழி வகுக்கும். எதிர்பாராத விதமாக தனவரவு கிடைக்கும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் உண்டாகும்.

சனி, ராகுவால் சிலருக்கு வெளியூர் பயணங்கள் ஏற்படும். பகைவரால் தொல்லைகள் ஏற்பட்டாலும் அதனை குரு பகவானால் முறியடிப்பீர்கள்.

உங்களது 10-ம் வீட்டில் சுக்கிரன் வக்ரம் அடைந்து இருப்பதால் மறைமுக போட்டிகள் ஏற்படும். வருகின்ற நவம்பர் 16-ம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தி ஆவதால் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறக் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடிவடையும்.

வருகின்ற நவம்பர் 17-ம் தேதி சூரியன் குருவுடன் இணைந்து விருச்சிகம் ராசியில் சஞ்சாரம் செய்வதால் பணியிடத்தில் உங்கள் அதிகாரம் மேலோங்கும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மொத்தத்தில் இந்த நவம்பர் மாதம் மகரம் ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளும் திடீர் திருப்பங்களும் ஏற்படும் மாதமாக இருக்கப் போகின்றது.

கும்பம்:

அன்புள்ள கும்பம் ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம்  உங்களுக்கு நினைத்த காரியம் கைக்கூடும் மாதமாக இருக்கப் போகின்றது. நவம்பர் 6-ம் தேதி உங்கள் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். செயலில் வேகமும் விவேகமும் கூடும். வருகின்ற நவம்பர் 16-ம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தியாகி ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் யோகமான பலன்களை தருவார். இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறக்கூடும். குரு உங்களது இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் தாராளமான பணவரவு உண்டு.

உங்கள் ராசிநாதன் சனி பகவான் பதினோராம் இடத்தில் இருப்பதால் லாபங்கள் அதிகரிக்கக்கூடும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரம் மற்றும் தொழில் சம்மந்தமாக விரிவாக்கம், மாற்றம் செய்ய நல்ல நேரமாக இருக்கின்றது. பணியிடத்தில் சவாலான பணிகளை சாதாரணமாக முடித்து காட்டுவீர்கள். இரும்பு, கணினி, நவீன உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டாகும்.

மாத தொடக்கத்தில் சூரியன் ஒன்பதாம் வீட்டில் இருக்கும் பொழுது தந்தையின் உடல் நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள். நவம்பர் 17-ம் தேதி சூரியன் விருச்சிகம் ராசியில் சஞ்சாரம் செய்கின்றார். குருவுடன் சூரியன் புதன் இணைந்து பத்தாம் வீட்டில் இருப்பதால் தொழிலில் அபார வளர்ச்சி மேலோங்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். புதிய இடத்தில் வேலைக்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும்.

சமூகத்தில் உங்களது பெயர், புகழ், அந்தஸ்து உயரும். பிள்ளைகள் சம்மந்தமாக எடுக்கின்ற முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அவ்வப்பொழுது தூக்கமின்மை, கனவு தொல்லை அதிகரிக்கக்கூடும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கக்கூடும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் இருக்கின்றது.

மீனம்:

அன்புள்ள மீனம் ராசியினர்களே, இந்த நவம்பர் மாதம் உங்களுக்கு தடைகளை தாண்டி வெற்றி பெறும் மாதமாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத வகையில் செலவுகள் அடுத்தடுத்து இருக்கக்கூடும். மாத தொடக்கத்தில் சூரியன் எட்டாம் வீட்டில் மறைவதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சளி சொந்தரவு, நெஞ்சு வலி, கொழுப்பு சம்மந்தமான பிரச்சனை வரக்கூடும்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனாவசிய பேச்சுகளை தவிர்த்திடுங்கள். சிறு தொழில் செய்கின்றவர்கள் அதிகம் உழைக்க வேண்டி வரக்கூடும். எதிர்பார்த்த லாபம் வருவதற்கு தாமதம் ஏற்படலாம். நவம்பர் 16-ம் தேதி சுக்கிரன் வக்ர நிவர்த்தியாவதால் திடீர் பணவரவு வரக்கூடும். ஆடை, அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருகின்ற நவம்பர் 17-ம் தேதி விருச்சிகம் ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கின்றார். சூரியன் புதன், குருவோடு இணைந்து உங்களது 9-ம் வீட்டில் இருக்கும் பொழுது யோகமான பலன்களை தருவார்.

நவம்பர் 6-ம் தேதி கும்பம் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பயணங்கள் அதிகரிக்கக்கூடும். சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படக்கூடும். சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் தலைத்தூக்கும். தந்தை வழி சொந்த பந்தங்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வரக்கூடும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்றமான காலமாக இருக்கக்கூடும். குரு பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் ஆதாயம் உண்டாகும்.

மீனம் ராசியினருக்கு நல்ல வரன் அமையக்கூடும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறக்கூடும்.

From around the web