மிதுனம் வைகாசி மாதம் ராசி பலன்கள் 2018!

மிதுனம் ராசியினர்களுக்கு இந்த வைகாசி மாதம் புதிய வாய்ப்புகளும், பொறுப்புகளும் வரக்கூடும் மாதமாக இருக்கப் போகின்றது. சூரியன் இந்த மாதம் முழுவதும் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கும். பல் வலி, உடல் உஷ்ணத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், காது பிரச்சனைகள் குணமாகும். சுக்கிரன் சாதகமான வீட்டில் இருப்பதால் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். ஒரு சிலர் குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குரு பகவான் ஐந்தாம் வீட்டில் தொடர்வதால் ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்பு
 
Mithunam vaigasi rasi palan 2018

மிதுனம் ராசியினர்களுக்கு இந்த வைகாசி மாதம் புதிய வாய்ப்புகளும், பொறுப்புகளும் வரக்கூடும் மாதமாக இருக்கப் போகின்றது. சூரியன்  இந்த மாதம் முழுவதும் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்கும். பல் வலி, உடல் உஷ்ணத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், காது பிரச்சனைகள் குணமாகும். சுக்கிரன் சாதகமான வீட்டில் இருப்பதால் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். ஒரு சிலர் குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குரு பகவான் ஐந்தாம் வீட்டில் தொடர்வதால் ஆன்மீக சுற்றுலா செல்லும் வாய்ப்பு அமையும். கோவில் கட்டுவது, கும்பாபிஷேகம் செய்வது போன்ற கோயில் திருப்பணிகளுக்கு நிதி உதவி செய்வீர்கள்.

புதன் பகவான் சாதகமாக இருப்பதால் நீண்ட நாட்களாக சென்று வர நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.  செவ்வாய் கேதுவுடன் உங்கள் ராசியில் இருந்து எட்டாம் வீட்டில் இருப்பதால் செய்கின்ற காரியங்களில் சிறு தடையும், தாமதமும் உண்டாகும். சனி பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில் தொடர்வதால் கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வேலை சுமை அதிகரிக்கும். ஒரு சில நேரங்களில் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது போன்ற குழப்பங்கள் வரக்கூடும்.

பணியிடத்தில் உங்கள் ஆளுமை திறன் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் தானாக விலகி செல்வார்கள். புதியதாக வேலை வாய்ப்பு வரக்கூடும். அலுவலகத்தில் உங்கள் திறன் பளிச்சிடும்.

From around the web