மிதுனம் ராசி மே மாதம் ராசி பலன்கள் 2018!

மிதுனம் ராசிக்காரர்களே, இந்த மே மாதம் வாய்ப்புகள் வருகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசியில் இருந்து குரு பகவான் ஐந்தாம் இடத்திலும், ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசி மீது விழுவதால் நன்மைகள் அடுத்தடுத்து நடைபெறும். உங்களுக்கு வளர்ச்சியும், திருமண யோகத்தையும் கொடுக்கப் போகின்றது. உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்யும் அமைப்பு இருக்கின்றது. கண்ட சனியாக ஏழாம் வீட்டில் இருப்பதால்
 
Mithunam may month rasi palan 2018

மிதுனம் ராசிக்காரர்களே, இந்த மே மாதம் வாய்ப்புகள் வருகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசியில் இருந்து குரு பகவான் ஐந்தாம் இடத்திலும், ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசி மீது விழுவதால் நன்மைகள் அடுத்தடுத்து நடைபெறும். உங்களுக்கு வளர்ச்சியும், திருமண யோகத்தையும் கொடுக்கப் போகின்றது. உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லையே என்று இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்யும் அமைப்பு இருக்கின்றது.

கண்ட சனியாக ஏழாம் வீட்டில் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் வீட்டில் நடைபெறும் விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி படிப்படியாக ஏற்படக்கூடும். புதிய தொழில் முயற்சிகள் நல்லதாக முடிவுபெறும். சனி பகவான் வீண் அலைச்சல் கொடுத்தாலும் குரு பகவானால் உங்களுக்கு அனைத்து விதத்திலும் வளர்ச்சி பெறுகின்ற மாதமாக இருக்கப் போகிறது.

வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும். புதன் பகவான் சாதகமாக இருப்பதால் பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். இல்லத்தில் பெண்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதில் கிடைக்கும். மே நான்காம் தேதிக்கு பிறகு உடன் பிறந்தவர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உடல்நலம் சீராக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை. மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

மொத்தத்தில் இந்த மே மாதம் உங்களுக்கு அலைச்சல் தந்தாலும் வளர்ச்சி உண்டாகும் மாதமாக இருக்கப் போகின்றது.

From around the web