மிதுனம் ஜூலை மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள மிதுனம் ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதம் பலவீனங்களை சரி செய்து கொள்கின்ற மாதமாக அமையப் போகிறது. உங்கள் ராசிக்கு 5,12 அதிபதியான சுக்கிரன் ஜூலை 5-ம் தேதி சிம்மத்தில் சஞ்சரிப்பதால் நல்ல செய்தி வரக்கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் வந்து இருக்கின்றது. ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள்.
 
Mithunam july month rasi palan 2018

அன்புள்ள மிதுனம் ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதம் பலவீனங்களை சரி செய்து கொள்கின்ற மாதமாக அமையப் போகிறது. உங்கள் ராசிக்கு 5,12 அதிபதியான சுக்கிரன் ஜூலை 5-ம் தேதி சிம்மத்தில் சஞ்சரிப்பதால் நல்ல செய்தி வரக்கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் வந்து இருக்கின்றது.

ராசிநாதன் புதன் வலுவாக இருப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். உங்கள் ராசியில் சூரியன் இருப்பதால் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். பணிச்சுமை அதிகரிக்கும்.

உங்களைப் பற்றி விமர்சனம், தவறுகளை சுட்டி காட்டினால், ஆலோசனை வழங்கினாலும் அதனை பெரிது படுத்தாமல் அமைதியாக ஏற்று கொள்வது நல்லது.

ஜூலை 4-ம் தேதி தேதி குரு துலாம் ராசியில் வக்ர நிவர்த்தி ஆகின்றார். பலம்பெற்ற குரு பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கும். கல்யாண கனவு நனவாகும். அலுவலகத்தில் ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் கேது, செவ்வாய் இருப்பதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். ஜூலை 9-ம் தேதி மகரத்தில் செவ்வாய் வக்ரமாக சஞ்சரிப்பதால் தடைகள் அகலும். சொத்து பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரக்கூடும். அலுவலகத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். பணம் சீராக வரக்கூடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி லாபத்தைப் பெருக்குவீர்கள். பணப் பற்றாக்குறை அகலும். ஒரு சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும்.

From around the web