மிதுனம் ராசி சித்திரை மாதம் ராசி பலன்கள் 2018!

மிதுனம் ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதம் முழுவதும் பொருளாதாரம் மேம்படும் மாதமாக இருக்கப் போகின்றது. இந்த சித்திரை மாத தொடக்கத்தில் சுக்கிரன், சூரியன் லாப வீட்டில் இருப்பதால் பணம் புழக்கம் அதிகரிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். நண்பர்கள், உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குரு பகவான் ஐந்தாம் வீட்டில் தொடர்வதால் உங்கள் நிர்வாக திறன் புலப்படும். மிதுனம் ராசியினருக்கு கண்டச்சனி தொடர்வதால்
 
Mithunam chithirai rasi palan 2018

மிதுனம் ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதம் முழுவதும் பொருளாதாரம் மேம்படும் மாதமாக இருக்கப் போகின்றது. இந்த சித்திரை மாத தொடக்கத்தில் சுக்கிரன், சூரியன் லாப வீட்டில் இருப்பதால் பணம் புழக்கம் அதிகரிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். நண்பர்கள், உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குரு பகவான் ஐந்தாம் வீட்டில் தொடர்வதால் உங்கள் நிர்வாக திறன் புலப்படும். மிதுனம் ராசியினருக்கு கண்டச்சனி தொடர்வதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். படபடவென்று எதிலும் முடிவு எடுக்காதீர்கள். தீர யோசித்த பிறகே முடிவு எடுக்கவும்.

சனி பகவான் ஏழாம் வீட்டில் இருந்து ஏழாம்  பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் வீண் சந்தேகம், சண்டை, சச்சரவு வரக்கூடும். முடிந்த அளவிற்கு மூன்றாம் நபரை குடும்ப விஷயத்தில் தலையிட வைக்க வேண்டாம். ராகு பகவான் இரண்டாம் வீட்டிலும் கேது பகவான் எட்டாம் வீட்டிலும் இருப்பதால் வீண் அலைச்சல், மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். எந்த காரியம் செய்வதற்கு முன்பு தீர யோசித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். யாரையும் நம்பி பெரிய முதலீடு செய்ய வேண்டாம்.

சித்திரை மாதம் பதினேழாம் நாள் அதாவது 30-4-2018 தேதிக்கு அன்று செவ்வாய் கேதுவுடன் எட்டாம் வீட்டில் இணைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சித்திரை மாதத்தில் புதிய ஒப்பந்தங்கள் முடிவடையும். புதிய யுத்திகளை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். இழந்த வாய்ப்புகள், பதவிகளை இந்த சித்திரை மாதத்தில் பெறுவீர்கள்.

From around the web