மேஷம் வைகாசி மாதம் ராசி பலன்கள் 2018!

மேஷம் ராசியினருக்கு இந்த வைகாசி மாதம் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியம் கைக்கூடும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் தொட்டது துலங்கும் மாதமாக இருக்கப் போகின்றது. கடந்த ஒரு மாதம் முழுவதும் சூரியன் உங்கள் ராசிக்குள் அமர்ந்து பல விதத்தில் காரிய தடைகள், முன் கோபம் என்று இருந்து வந்த நிலை மாறும். இப்பொழுது ராசிக்கு இரண்டாம் வீட்டில் நுழைவதால் ஆரோக்கியம் சீராகும். ஒரு சிலருக்கு வீடு, மனை வாங்குவது நல்ல விதத்தில் முடிவடையும். கடினமாக பேசி
 
Mesham vaigasi rasi palan 2018

மேஷம் ராசியினருக்கு இந்த வைகாசி மாதம் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியம் கைக்கூடும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் தொட்டது துலங்கும் மாதமாக இருக்கப் போகின்றது. கடந்த ஒரு மாதம் முழுவதும் சூரியன் உங்கள் ராசிக்குள் அமர்ந்து பல விதத்தில் காரிய தடைகள், முன் கோபம் என்று இருந்து வந்த நிலை மாறும். இப்பொழுது ராசிக்கு இரண்டாம் வீட்டில் நுழைவதால் ஆரோக்கியம் சீராகும். ஒரு சிலருக்கு வீடு, மனை  வாங்குவது நல்ல விதத்தில் முடிவடையும்.

கடினமாக பேசி ஒரு சிலரின் நட்பை இழந்து விடுவீர்கள் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. யாரையும் பற்றி புறம் பேசி கொண்டு இருக்காதீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். குரு பகவான் சாதகமாக இருப்பதால் கணவன் மனவிடைய ஒற்றுமை நிலவும். செவ்வாய் கேது பகவான் பத்தாம் வீட்டில் இருப்பதால் குழந்தை செல்வம் கிட்டும்.

சனி பகவான் ஒன்பதால் வீட்டில் இருப்பதால் ஒரு சில நேரங்களில் யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற குழப்பங்கள் வரக்கூடும்.

சுக்கிரன் சாதகமாக இருப்பதால் இளமை, அழகு கூடும். ஒரு சிலருக்கு தள்ளிப்போன திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல படியாக முடிவடையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாதப் பிற்பகுதியில் நல்லவை நடைபெறும் மாதமாக இருக்கப் போகின்றது. புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

From around the web