மேஷம் ராசி மார்ச் மாத பொது பலன்கள் 2018!

மேஷம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் நல்லது நடைபெற போகிறது. சொன்னது பலிக்கும் காலகட்டமாக இருப்பதால் கூடுதல் முயற்சி செய்தால் எளிதில் வெற்றி கிட்டும். இதுவரை உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் எல்லாம் மறைய தொடங்குவார்கள். சூரியன் லாப ஸ்தானமான கும்ப ராசியில் சச்சரிக்கும் பொழுது தொழில், வியாபாரம், வேலை செய்யும் இடத்தில் பல வித முன்னேற்றங்கள் ஏற்படும். மேஷம் ராசியினருக்கு குருவின் பார்வை ராசியில் இருப்பதால் எதிர்ப்பார்க்கின்ற நல்ல செய்திகள் வர தொடங்கும். நீங்கள் எதிர்ப்பார்த்து
 
மேஷம்

மேஷம் ராசியினருக்கு இந்த மார்ச்  மாதம் தொடக்கத்தில் நல்லது நடைபெற போகிறது. சொன்னது பலிக்கும் காலகட்டமாக இருப்பதால்  கூடுதல் முயற்சி செய்தால் எளிதில் வெற்றி கிட்டும். இதுவரை உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் எல்லாம் மறைய தொடங்குவார்கள்.  சூரியன் லாப ஸ்தானமான கும்ப ராசியில் சச்சரிக்கும் பொழுது தொழில், வியாபாரம், வேலை செய்யும் இடத்தில் பல வித முன்னேற்றங்கள்  ஏற்படும்.

மேஷம் ராசியினருக்கு குருவின் பார்வை ராசியில் இருப்பதால்  எதிர்ப்பார்க்கின்ற நல்ல செய்திகள் வர தொடங்கும். நீங்கள் எதிர்ப்பார்த்து கொண்டு இருந்த பணியிட மாற்றங்கள், பதவி உயர்வு, படிப்பிற்கு ஏற்றார் போல் வேலை போன்றவை அமையும். புதிய வாய்ப்புகள், உபரி வருமானம் வரக்கூடும்.  மாற்றம் வந்தால் தயங்காமல் ஏற்று கொள்ளுங்கள். இது ஏன்  எனக்கு மட்டும் இவ்வாறு நிகழ்கிறது என்று புலம்பி கொண்டு இருக்காமல் நடைபெறும் யாவும் நன்மைக்கே என்று எடுத்து கொள்ளுங்கள். பொருளாதார தேவை பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள், வெளியூர் வேலை அமைப்பு வரக்கூடும். மாத தொடக்கத்தில் சுக்ரன் மீனத்தில் இருப்பதால் நீங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள். மாத இறுதியில், அதாவது இருபத்தாறாம் தேதி சுக்ரன் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்வதால் எதிலும் அழகுடன் செய்ய விரும்புவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு  எதிர்ப்பார்த்து கொண்டு இருந்த சம்பள  உயர்வு, பட்டம், பாராட்டுகள் எல்லாம் கிடைக்கும். போட்டி, பொறாமைகள் மறைந்து உங்களுக்கு சக ஊழியர்களிடம் மரியாதை, மதிப்பு வரக்கூடும்.

உற்றார் உறவினர்கள் வருகை உங்களுக்கு மகிழ்ச்சி தரும். இந்த மாதம் ஆன்மீக சுற்றுலா சென்று வர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சொந்தம் பந்தம் வருகையால் மகிழ்ச்சிகரமாக காணப்படுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு இருந்த சலசலப்பு குறைந்து ஒற்றுமை நிலவும். கொடுக்கல், வாங்கல், ரியல் எஸ்டேட், வியாபாரம், சிறு தொழில் போன்றவற்றால் லாபங்கள் வரக்கூடும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் ஏற்படக்கூடும். இதுவரை எந்த சுப காரியங்கள் நடைபெறவில்லை என்று எதிர்ப்பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு சுப காரியங்கள் நடக்கும்.

From around the web