மேஷம் ராசி சித்திரை மாதம் ராசி பலன்கள் 2018!

மேஷம் ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதத்தில் உங்கள் பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வு இருந்தாலும் உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து அதிகரிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது. மேஷம் ராசியினருக்கு சுக்ரன் ராசியில் இருக்கும் பொழுது பொலிவு கூடும். உங்கள் கனிவான பேச்சால் எல்லாரையும் கவர்வீர்கள். ஒரு சிலருக்கு குடும்ப தேவைகள் பூர்த்தி பெறும் மாதமாக இருக்கப் போகிறது. திடீர் பயணங்கள், செலவுகள் ஏற்படக்கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் நல்ல கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவி
 
Mesham chithirai rasi palan 2018

மேஷம் ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதத்தில் உங்கள் பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வு இருந்தாலும் உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து அதிகரிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது. மேஷம் ராசியினருக்கு சுக்ரன் ராசியில் இருக்கும் பொழுது பொலிவு கூடும். உங்கள் கனிவான பேச்சால் எல்லாரையும் கவர்வீர்கள். ஒரு சிலருக்கு குடும்ப தேவைகள் பூர்த்தி பெறும் மாதமாக இருக்கப் போகிறது. திடீர் பயணங்கள், செலவுகள் ஏற்படக்கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களிடம் நல்ல கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவி  வழியால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குரு பகவான் ஏழாம் வீட்டில் இருந்து ஏழாம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் சுப நிகழ்வுகள் நடைபெறும். தடைபட்டுக் கொண்டு இருந்த காரியங்கள் யாவும் அடுத்தடுத்து நடைபெறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஒரு சிலர் ஆன்மீக சுற்றலா சென்று வருவீர்கள்.

ராகு பகவான் நான்காம் வீட்டிலும், கேது பகவான் பத்தாம் வீட்டிலும் இருப்பதால் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் மூலம் ஆதாயம் கிட்டும். ஒரு சிலருக்கு உபரி வருமானம் வரக்கூடும். சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் தன்னம்பிக்கையுடன் செயல் படுவீர்கள். சித்திரை மாதம் பதினேழாம் நாள் அதாவது (30-4-2018) பிறகு உங்கள் ராசியின் அதிபதி கேதுவுடன் இணைவதால் திறமை பளிச்சிடும்.

வியாபாரம், தொழில் பிரிவினர் அனுபவ அறிவை பயன்படுத்தி லாபம் ஈட்டுவார்கள். மருந்து, ஸ்டேஷனேரி, உணவு, கெமிக்கல், ஏற்றுமதி, இறக்குமதி ,வாகனம் போன்ற தொழில் செய்பவர்கள் லாபம் பெறுவார்கள். அலுவலகத்தில் கூடுதலாக பணிபுரிய வேண்டி வரக்கூடும். யாரையும் வீண் விமர்சனம் மற்றும் குறைகளை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம்.

மேஷம் ராசியினர் மனம் தளராமல், கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மொத்தத்தில் சித்தரை மாதத்தில் மேஷம் ராசியில் பிறந்தவர்கள் எதிலும் உற்ச்சாகத்துடன், சுறுசுறுப்புடன் செயல் புரிவீர்கள்.

From around the web