மேஷம் ஆனி மாதம் ராசி பலன்கள் 2018!

மேஷம் ராசியினருக்கு இந்த ஆனி மாதம் அதிர்ஷ்ட மாதமாகவே இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் மகரத்தில் உச்சம் பெற்றுள்ளதால் யோகமான நேரமாக அமையும். மேலும் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பார்த்து ஏங்கி கொண்டு இருந்தவை நல்ல படியாக முடிவடையும். இதுவரை வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லையே என்று இருந்தவர்களுக்கு இந்த ஆனி மாதத்தில் முன்னேற்றங்களும் மாற்றங்களும் ஏற்படுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. இதுவரை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சனைகள் இருந்து வந்தவர்களுக்கு சூரியனை
 
Mesham aani rasi palan 2018

மேஷம் ராசியினருக்கு இந்த ஆனி மாதம் அதிர்ஷ்ட மாதமாகவே இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் மகரத்தில் உச்சம் பெற்றுள்ளதால் யோகமான நேரமாக அமையும். மேலும் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பார்த்து ஏங்கி கொண்டு இருந்தவை நல்ல படியாக முடிவடையும். இதுவரை வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லையே என்று இருந்தவர்களுக்கு இந்த ஆனி மாதத்தில் முன்னேற்றங்களும் மாற்றங்களும் ஏற்படுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது.

இதுவரை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சனைகள் இருந்து வந்தவர்களுக்கு சூரியனை கண்டப் பனி போல அனைத்துப் பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வரக்கூடும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். தள்ளிப்போன சுப பேச்சுவார்த்தைகள் நல்ல விதத்தில் முடிவடையும். இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் சுமுகமாக முடிவடையும்.

தாய்வழியால் ஆதாயம் உண்டாகும். ராசிநாதன் பத்தாம் வீட்டில் உச்சமாக இருப்பதால் தொழில், வியாபாரம் லாபகரமாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு, வேறு வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சண்டை சச்சரவு மறைந்து நிம்மதியான சூழல் உருவாகும்.

ஏழாம் பார்வையாக உங்கள் ராசியை குரு பார்ப்பதால் கணவன் மனவிடையே ஒற்றுமை நிலவும். பழைய கடன்களை அடைக்கும் அளவிற்கு நல்ல பணவரவு இருக்கும். அரசு சார்ந்த ஊழியர்களுக்கு ஏற்றமான மாதமாக இந்த ஆனி மாதம் அமையும். ஜூன் 24 முதல் 27 வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிர்த்திடுங்கள்.

From around the web