மீனம் ராசி விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018!

மீனம் ராசிக்காரர்கள் இந்த தமிழ்ப் புத்தாண்டில் எதிலும் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும். உங்கள் ராசியில் இருந்து பத்தாம் இடத்தில் சனி பகவான், பதினோராம் இடத்தில் கேது பகவான், ஐந்தாம் இடத்தில் ராகு பகவான், எட்டாம் இடத்தில் குரு பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் இந்த விளம்பி வருடத்தில் அடுத்தடுத்து குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது. யாரிடமும் வீண் பகைக் கொள்ளாதீர்கள். உங்கள் கடமையை செய்து கொண்டு இருந்தால் போதும். ஏன்
 
Meenam vilambi Tamil puthandu rasi palan

மீனம் ராசிக்காரர்கள் இந்த தமிழ்ப் புத்தாண்டில் எதிலும் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டும். உங்கள் ராசியில் இருந்து பத்தாம் இடத்தில் சனி பகவான், பதினோராம் இடத்தில் கேது பகவான், ஐந்தாம் இடத்தில் ராகு பகவான், எட்டாம் இடத்தில் குரு பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கிறது. மேலும் இந்த விளம்பி வருடத்தில் அடுத்தடுத்து குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி நடக்க இருக்கிறது.

யாரிடமும் வீண் பகைக் கொள்ளாதீர்கள். உங்கள் கடமையை செய்து கொண்டு இருந்தால் போதும். ஏன்  இப்படி  செய்தார்கள், எதற்கு அவ்வாறு பேசினார்கள் என்று புலம்பி கொண்டு இருக்காதீர்கள். வீண் சந்தேகம்,  வன்மம்  வேண்டாத  பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். வீண் பெருமை, வீண் பேச்சுகளைத் தவிர்த்து விடுங்கள். முன்பின் தெரியாத நபர்களிடம் குடும்பம் மற்றும் அலுவலக விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். செய்கின்ற வேலையை கவனமாக செய்யுங்கள். முன்கோபத்தை தவிர்த்திவிடுங்கள். பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். இந்த விளம்பி வருடத்தில் முன்கோபம் மற்றும் வீண் பேச்சுகளைத் தவிர்த்தால் ஏற்றங்களும் மாற்றங்களும் உண்டாகும்.

கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும்.  ஒப்பந்தங்களில் நன்கு படித்துப் பார்த்தப் பிறகு கையெழுத்திடுங்கள். நேர்மையான அணுகுமுறை வெற்றிக்கு வழி வகுக்கும்.

இதுவரை குடும்பத்தில் நிலவிவந்த சண்டை, சச்சரவுகள் எல்லாம் படிப்படியாக விலகும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து விட்டுக் கொடுத்து போனால் இல்லத்தில் அமைதி நிலவும். வீடு, மனை வாங்கும் பொழுது பத்திரங்களைப் படித்துப் பார்த்து கையெழுத்து போடுங்கள். பெற்றோர் மற்றும் வீட்டிலுள்ள மூத்தவர்கள் பேச்சைக் கேட்டு நடந்து கொண்டால் எதிர்காலம் இனிதாக அமையும்.

மீனம் ராசி பெண்கள் விட்டுக்கொடுத்து சென்றால் நல்ல ஏற்றமான வருடமாக அமையும். உங்கள் மனதிற்கு ஏற்ற படி எல்லாம் அமையும்.  எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். வங்கி  கணக்கில் சேமிப்புக் கூடும். பெற்றோரை அனுசரித்துச் செல்லுங்கள்.

மீனம் ராசியினருக்கு மனம் சஞ்சலம் அடையும் என்பதால் மனதை ஒருநிலைப்படுத்துங்கள். தினமும் பத்து நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள். உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு தீ, மின்சாரம் போன்றவற்றால் பாதிப்புகள் உண்டாகும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மீனம் ராசி மாணவ மாணவிகளுக்கு கவனம் சிதறும், படிப்பில் நாட்டம் குறையும். நவீன சாதனங்களை அதிகம் பயன்படுத்தாமல், பகுதி நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால் சோம்பல் மற்றும் அலட்சியத்தைத் தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

பரிகாரம்:

அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வணங்கி வரலாம். வெள்ளிக்கிழமையன்று துர்க்கை அம்மனை வழிபட்டு  வந்தால் குடும்பத்தில் ஏற்படுகின்ற சிக்கல்கள் யாவும் அகலும்.

From around the web