மீனம் ராசி மார்ச் மாத பலன்கள் 2018!

மீனம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். சுப விரயம் உண்டாகும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும். நீங்கள் எதிர்ப்பார்த்து செய்யும் காரியங்களை விட, எதிர்ப்பார்க்காமல் செய்யும் காரியங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். செய்யும் வேலை, தொழில், வியாபாரத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். குரு எட்டாம் இடத்திலும், சூரியன் பன்னிரண்டாம் இடத்திலும் இருப்பதால் பணம் விரயம் ஏற்படக்கூடும். ஏதாவது சிந்தனை செய்துக் கொண்டே இருப்பீர்கள். தேவையற்ற சிந்தனை, வீண் கற்பனை வளர்த்து கொள்ளாதீர்கள்.
 
மீனம்

மீனம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். சுப விரயம் உண்டாகும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும். நீங்கள் எதிர்ப்பார்த்து செய்யும் காரியங்களை விட, எதிர்ப்பார்க்காமல் செய்யும் காரியங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். செய்யும் வேலை, தொழில், வியாபாரத்தில்  விழிப்புடன்  செயல்பட வேண்டும்.

குரு எட்டாம் இடத்திலும், சூரியன் பன்னிரண்டாம் இடத்திலும் இருப்பதால் பணம் விரயம்  ஏற்படக்கூடும். ஏதாவது சிந்தனை செய்துக் கொண்டே இருப்பீர்கள். தேவையற்ற  சிந்தனை, வீண் கற்பனை வளர்த்து  கொள்ளாதீர்கள்.  ஒன்றுமே இல்லாத விஷத்திற்கு வீண் சந்தேகம், கற்பனை செய்து பிறகு உடல் நலக்குறைவு  ஏற்படக்கூடும். குருவின் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். நீண்ட காலமாக குழந்தைப்பேறு எதிர்ப்பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும். பூர்விக சொத்துகள் சம்மந்தமான பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக முடிவடையும்.  அதிகம் விரயம் ஏற்படுவதால் ஒரு சிலருக்கு கடன் வாங்க நேரிடலாம். செலவுகளை குறைத்து கொண்டு, தேவையானதற்கு மட்டும் செலவு செய்யுங்கள்.

மார்ச் 10-ம் தேதி வரை செவ்வாய் ஒன்பதாம் இடத்தில்  இருப்பதால் சிக்கனமாக இருக்கலாம் என்று நினைத்தால் கூட எதிர்பாராத விதமாக ஏதேனும் செலவுகள் வரக்கூடும். பதினோராம் இடத்தில்  இருக்கும் கேது பகவான் உங்களுக்கு உதவிகள் கிடைக்கச் செய்வார். உடல் நிலையில் அவ்வப்பொழுது பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. பயணங்களால் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய உத்திகளை பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். தொழிலில் புதிய கிளைகள் தொடங்குவதை சிறிது காலம் தள்ளிப் போடுங்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பெற்றோர்களுக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

From around the web