மீனம் ராசி ஏப்ரல் மாதம் ராசி பலன்கள் 2018!

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் வசதி வாய்ப்புகள் கூடும் மாதமாக இருக்கப் போகின்றது. இந்த ஏப்ரல் மாதம் உங்களை வெற்றி பாதையில் அழைத்து செல்ல போகின்றது. மீனம் ராசியினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். செய்கின்ற வேலையில் அலட்சியம் காட்டாமல் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும். குரு பகவான் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருப்பதால் வீண் டென்ஷன், மன அமைதியின்மை, முன்கோபம், தலைசுற்றல் வந்து நீங்கும். மற்றவர்கள் மீது தேவையில்லாத சந்தேகம் தோன்றக்கூடும்.
 
Meenam april month rasi palan 2018

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் வசதி வாய்ப்புகள் கூடும் மாதமாக இருக்கப் போகின்றது. இந்த ஏப்ரல் மாதம் உங்களை வெற்றி பாதையில் அழைத்து செல்ல போகின்றது. மீனம் ராசியினர் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். செய்கின்ற வேலையில் அலட்சியம் காட்டாமல் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும்.

குரு பகவான் ராசிக்கு எட்டாம் வீட்டில் இருப்பதால் வீண் டென்ஷன், மன  அமைதியின்மை, முன்கோபம், தலைசுற்றல் வந்து நீங்கும். மற்றவர்கள் மீது தேவையில்லாத சந்தேகம் தோன்றக்கூடும். எதையோ இழந்தது போன்று இருப்பீர்கள். மனதில் இனம் புரியாத பயம், கவலை வரக்கூடும்.

உங்கள் ராசியிலிருந்து 11-ம் வீட்டில் ஏப்ரல் 30-ம் தேதி செவ்வாய், கேதுவுடன் இணைவதால் நிர்வாக திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நான்கைந்து வேலைகளை ஒரே சமயத்தில் பார்க்க வேண்டி வரும். வீடு, வாகனம் பராமரிப்பு செலவுகள் ஏற்படக்கூடும். இல்லத்தில் ஒற்றுமை ஏற்படும். வீட்டில் இருப்பவர்கள் உங்கள் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். சகோதர, சகோதரிகள் பாசம் காட்டுவார்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கேது பகவான் பதினோராம் வீட்டில் இருப்பதால் பணவரவு சீராக இருக்கும். இதுவரை இருந்து வந்த தயக்கம், தடுமாற்றம் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். ஐந்தாம் இடத்தில் ராகு பகவான் இருப்பதால் டென்ஷன்,  அலைச்சல் ஏற்படக்கூடும். சனி பகவான் உங்கள் ராசியில் இருந்து பத்தாம் வீட்டில் இருப்பதால் தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். உங்கள் திறமை பளிச்சிடும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

அலுவலகத்தில் வேலை சுமை குறையும். மறைமுக எதிரிகள் தோன்றக்கூடும் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலதிகாரிகள்  உங்களை நம்பி முக்கியமான பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.

வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் கிடைக்கும்.

From around the web