மீனம் ஆனி மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள மீனம் ராசிக்காரர்களே, இந்த ஆனி மாதம் உழைப்புக்கேற்ற வெற்றி பெறுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிக்கு யோகாதிபதி செவ்வாய் உச்சமாக இருப்பதால் தொட்டது துலங்கும். எடுக்கின்ற காரியங்கள் யாவும் நல்ல விதத்தில் முடிவடையும். வேலை சுமை அதிகரித்தாலும் சற்றும் உழைப்பதற்கு அஞ்சாமல் நல்லபடியாக முடித்து விடுவீர்கள். ராகு சுக்கிரன் இணைந்து ஐந்தாம் இடத்தில் இருப்பதால் யாரையும் நம்பி குடும்ப விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தாராளமான பணவரவு இருக்கக்கூடும்.
 
Meenam aani rasi palan 2018

வியாபாரம், தொழில், சிறு தொழில் செய்கின்றவர்களுக்கு ஏற்றமான நேரமாகும். விரிவாக்கம், மாற்றி அமைத்தல் எல்லாம் நல்லபடியாக முடிவடையும். ஒரு சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புதிய வேலை அமையக்கூடும்.

உங்கள் ராசிநாதன் எட்டாம் வீட்டில் தொடர்வதால் வேலை சுமை அதிகரிக்கும். அதே சமயம் உங்களுக்கு மற்ற கிரகங்கள் சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் திறன் இருக்கும். நிதானமாக பொறுமையுடன் செயல்புரிந்து வெற்றி அடைவீர்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நிற்பீர்கள். வண்டி,வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது. முன்பின் அறிமுக இல்லாத நபர்களிடம் பணம் இழக்க நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

From around the web