முன்னோர்களின் அருளாசியோடு வெற்றியை தேடித்தரும் மஹாளய அமாவாசை – முழு விளக்கம்!

நம்மில் பலருக்கு பல விதமான ஏக்கங்கள் நிறைவேறாமல் இருப்பதற்குக் காரணம் இறந்த முன்னோர்களுக்கு மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம் செய்யாமல் இருப்பது தான்!!! பின்வரும் ஏக்கங்கள் நம்மில் பலருக்கு இருக்கின்றதா? கடன் தீராமல் இருப்பது நோய் தீராமல் இருப்பது தேவையற்ற வம்பு வழக்கில் சிக்கி வாழ்நாளின் பெரும்பகுதி வீணாவது ஒற்றுமையில்லாமல் வாழ்ந்து வரும் தம்பதியினர் கொடுத்த பணம் திரும்பி வராமல் இருப்பது கொடுத்த கடன் திரும்பி வராமல் இருப்பது பூர்வீக சொத்து கிடைக்காமல் இருப்பது எல்லாம் இருந்தும்
 
mahalaya amavasya

நம்மில் பலருக்கு பல விதமான ஏக்கங்கள் நிறைவேறாமல் இருப்பதற்குக் காரணம் இறந்த முன்னோர்களுக்கு மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம் செய்யாமல் இருப்பது தான்!!!

முன்னோர்களின் அருளாசியோடு வெற்றியை தேடித்தரும் மஹாளய அமாவாசை – முழு விளக்கம்!

பின்வரும் ஏக்கங்கள் நம்மில் பலருக்கு இருக்கின்றதா?

கடன் தீராமல் இருப்பது

நோய் தீராமல் இருப்பது

தேவையற்ற வம்பு வழக்கில் சிக்கி வாழ்நாளின் பெரும்பகுதி வீணாவது

ஒற்றுமையில்லாமல் வாழ்ந்து வரும் தம்பதியினர்

கொடுத்த பணம் திரும்பி வராமல் இருப்பது

கொடுத்த கடன் திரும்பி வராமல் இருப்பது

பூர்வீக சொத்து கிடைக்காமல் இருப்பது

எல்லாம் இருந்தும் மன நிம்மதியில்லாமல் இருப்பது

விரும்பிய படிப்பு படிக்க முடியாமல் போவது

விரும்பிய வேலை அல்லது தொழில் அமையாமல் போவது

ஆபத்துக் காலத்தில் கூட உதவிகள் கிடைக்காமல் போவது

உழைப்பு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போவது

திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போய்,வாழ்நாள் முழுவதும் சராசரி வாழ்க்கை வாழ்ந்து வருவது

முறையான பரிகாரங்கள் செய்தும் தோஷங்கள் தீராமல் போவது

திருமணம் ஆகாமல் இருப்பது

திருமணம் ஆகியும் பல ஆண்டுகள் குழந்தை பிறக்காமல் தவிப்பது & அவமானப்படுவது

சொந்தவீடு அமையாமல் இருப்பது

ஏன் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்?

இறந்த முன்னோர்களாகிய தாத்தா,பாட்டி;பூட்டன் பூட்டி போன்றவர்களில் ஒரு சிலர் தவிர பெரும்பாலானவர்கள் பித்ருக்கள் உலகத்திற்கு சென்று அங்கேயே வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்:

அவர்களின் மனம் குளிரும் விதமாக,நாம் இன்றைய வேகமான ஆண்டிராய்டு யுகத்தில் (கலியுகத்தில்) பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை ஆகும்;

அப்படி அடிக்கடி பித்ரு தர்ப்பணம் செய்தால்,நமது நியாயமான ஏக்கங்கள் விரைவில் நிறைவேறிவிடும்;அடிக்கடி முடியாவிட்டாலும், இந்த புரட்டாசி அமாவசை அன்றாவது பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்;

14.9.2019 சனிக்கிழமை முதல் 28.9.2019 சனிக்கிழமை வரை இருக்கும் நாட்கள் தான் மஹாளய பட்சம்!

இந்த நாட்களில் நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் நமது வீட்டில் இருக்கும்

உரல்,

அம்மி,

சுளவு என்ற முறம்,

பூஜை அறை,

சந்தனம் அரைக்கும் கல்

வளர்க்கும் நாட்டுப் பசு

உலக்கை

ஆட்டுக் கல்

சந்தனம் அரைக்கும் கல்

சந்தனம்

செம்புப் பாத்திரங்கள்

மூங்கிலில் செய்யப்பட்ட பொருட்கள்

துளசி மாடம்

பஞ்சவாத்தியம்

போன்ற இடங்களில் ஒன்றில் கடைசி இரண்டு நாட்கள் அமர்ந்திருப்பார்கள்:(இதில் ஒன்றாவது நமது வீட்டில் இப்போதும் இருக்கின்றதா?)

பித்ருக்கள் உலகத்தில் முறையான அனுமதி பெற்று நம் அனைவரது வீடுகளிலும் தங்குவர்;

ஓரளவு தெய்வீக சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே கண்களுக்கு தெரிவர்;பேசுவதும் கேட்கும்;

நம்மைப் போன்ற மற்றவர்களுக்கு தெரியாது;இந்த 14 நாட்களும் தாம்பத்தியம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;அது தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடுவது அவர்களுக்கு பிடிக்காது;

இந்த 14 நாட்களும் பித்ரு தர்ப்பணம் செய்ய் வேண்டும்;அதற்கு வசதி இல்லாதவர்கள் தினமும் நாட்டுப் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் தானம் செய்து வந்தால் போதும்;

14 வது நாளான 28.9.2019 சனிக்கிழமை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்;

ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால்,கடந்த 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த புண்ணியம் கிட்டும்;

28.9.2019 அன்று தர்ப்பணம் செய்தால்,2007 முதல் இந்த வருடம் வரை தர்ப்பணம் செய்யாமல் விடுபட்ட பித்ரு கடனை தீர்த்ததாக அர்த்தம்!!!

28.9.2019 சனிக்கிழமை அன்று தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள்,அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தின் வாசலில் காலை,மதியம்,இரவு என்று 3 வேளையும் அன்னதானம் செய்யலாம்;ஒரே ஒரு துறவி அல்லது ஏழைக்கு அன்னதானம் செய்தாலும் போதும்;

வசதியும்,தெய்வ நம்பிக்கையும் உள்ளவர்கள் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய இடம்: அண்ணாமலை என்ற அருணாச்சலம்!!!

இயலாதவர்கள் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலய குளக்கரையில் பித்ரு தர்ப்பணம் செய்யலாம்;

எழுதியவர்

ஜோதிடர் கை . வீரமுனி

From around the web