மகரம் வைகாசி மாதம் ராசி பலன்கள் 2018!

மகரம் ராசிக்காரர்களே, இந்த வைகாசி மாதம் தொலைநோக்கு சிந்தனையால் வெற்றி பெரும் மாதமாக இருக்கப் போகின்றது. செவ்வாய் கேதுவுடன் ராசியில் இருப்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். எதிலும் அலைச்சல், தாமதமாக தான் முடிவடையும். சூரியன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி மனக்கவலை வரக்கூடும். ஏழரைச் சனி நடைபெறுவதால் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடுத்தடுத்து இருந்துக் கொண்டே இருக்கும். ஒரு சில நேரங்களில் உங்கள் திறமை வெளிப்படவில்லையே, திறமைக்கேற்ப உயர்வு இல்லையே என்று மனம்
 
Magaram vaigasi rasi palan 2018

மகரம் ராசிக்காரர்களே, இந்த வைகாசி மாதம் தொலைநோக்கு சிந்தனையால் வெற்றி பெரும் மாதமாக இருக்கப் போகின்றது. செவ்வாய் கேதுவுடன் ராசியில் இருப்பதால் வேலைச் சுமை அதிகரிக்கும். எதிலும் அலைச்சல், தாமதமாக தான் முடிவடையும். சூரியன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி மனக்கவலை வரக்கூடும். ஏழரைச் சனி நடைபெறுவதால் செலவுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அடுத்தடுத்து இருந்துக் கொண்டே இருக்கும்.

ஒரு சில நேரங்களில் உங்கள் திறமை வெளிப்படவில்லையே, திறமைக்கேற்ப உயர்வு இல்லையே என்று மனம் கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். சுக்கிரன் ஒன்பதாம் தேதிக்கு பிறகு உங்கள் ராசியை ஏழாம் பார்வையாக பார்ப்பாதல் நல்லவை நடைபெறும். உங்கள் திறமை பளிச்சிடும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

வியாபாரம் ஏற்றமும் இறக்குமாக இருக்கும். வியபாரத்தை பெருகுவதற்கு புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். புதிய யுக்திகளை பயன்படுத்தி கணிசமான லாபத்தை பெறுவீர்கள்.

அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக பலரும் செயல்படுவார்கள். சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உங்கள் மீது வீண் பழி ஏற்பட நேரிடும். பேச்சில் கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்.

From around the web