மகரம் ராசி மார்ச் மாத பலன்கள் 2018!

பந்தம், பாசமிக்க மகரம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் புதிய வாய்ப்புகள் வரக்கூடும். இரண்டாமிடத்து சூரியன் மாதத்தின் பிற்பாதியில் மூன்றாம் இடத்திற்கு செல்வதால் தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றில் சாதகமான பலன்கள் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பது மற்றும் குரு, சனி சாதகமான சஞ்சாரத்தினால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் தடையின்றி நடைபெறும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள், மந்தமான சூழல் எல்லாம் 2/3/2018 பிறகு மாற போகிறது. கேட்கின்ற இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.
 
மகரம்

பந்தம், பாசமிக்க மகரம் ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் புதிய வாய்ப்புகள் வரக்கூடும். இரண்டாமிடத்து சூரியன் மாதத்தின்  பிற்பாதியில் மூன்றாம்  இடத்திற்கு செல்வதால் தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றில் சாதகமான பலன்கள் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பது மற்றும் குரு, சனி சாதகமான சஞ்சாரத்தினால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் தடையின்றி நடைபெறும்.

இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள், மந்தமான சூழல் எல்லாம் 2/3/2018 பிறகு மாற போகிறது. கேட்கின்ற இடத்தில்  இருந்து பணம் கிடைக்கும். வங்கியில் கடன் கிடைக்கும். உங்களுக்கு தாராளமான பணவரவு இருக்கும்.

ஒரு சிலருக்கு புதிய பதவி, பொறுப்புகள் வரக்கூடும். சொத்துகள் வாங்குவது, விற்பது எல்லாம் சிறப்பாக முடிவடையும். மனதில் அதிக கற்பனைகள், எண்ணங்கள்  இருந்தாலும் நிகழ்காலத்திற்கு ஏற்றார் போல் முயற்சி செய்தால் வெற்றி கிட்டும். இதுவரை குடும்பத்தில் இருப்பவர்களிடம் சண்டை, சச்சரவு என்று இருந்தவர்களுக்குள் ஒற்றுமை நிலவும். ஓரளவிற்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு கிட்டும்.

புதன் சாதகமான வீட்டில் செல்வதால் நீண்ட நாட்களாக சந்திக்காத நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் நீண்ட நாட்களாக இருக்கும் கனவுகள் நனவாகும்.

அநாவசிய பேச்சு வார்த்தைகளைத் தவிர்த்து விடுங்கள். உங்களிடம் பெரிய பொருளாதாரம், வசதிகள்  இல்லாவிட்டாலும் உங்கள் செயல்களின் மூலம் மதிப்பு, மரியாதை பளிச்சிடும். ஒரு சிலருக்கு அலைச்சல் ஏற்பட்ட  பிறகு வேலை முடிவடையும். உத்தியோகஸ்தர்கள் திறம்பட செயல் புரிந்து மூத்த அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு பெறுவார்கள்.

தொழில், வியாபாரம்  செய்பவர்களுக்கு எதிர்ப்பார்த்த லாபம் வரக்கூடும். தேவைகள் பூர்த்தியாகும் மாதமாக இருக்கிறது. மாணவர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  உடல் நிலையில் ஏற்படும் உபாதைகளால் படிப்பில் உற்சாகம் தடைபடும். மாணவர்கள் படிப்பில் அதிக நேரத்தைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் நன்மை உண்டாக்கும். மேலும் மகரம் ராசியினர் தடைகள் விலகி நல்லவை நடைபெற சிவன் வழிபாடு செய்ய வேண்டும்.

From around the web