மகரம் ராசி சித்திரை மாதம் ராசி பலன்கள் 2018!

மகரம் ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதம் தர்மசங்கடமான நிலைகளை சமாளித்து முன்னேற்றம் பெறும் மாதமாக இருக்கப் போகின்றது. இந்த சித்திரை மாதத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். குறுகிய வட்டத்தில் இருக்காமல் பரந்து விரிந்து சாதனை புரிவீர்கள். இதுவரை இனம் புரியாத பயம் இருந்து வந்ததே இனி அந்த நிலை மாறும். குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து பத்தாம் வீட்டில் தொடர்வதால் பதட்டமான சூழல் ஏற்படும். வேலை சுமை அதிகரிக்கும். இரண்டு வேலைகளை ஒரே சமயத்தில் இழுத்து
 
Magaram chithirai rasi palan 2018

மகரம் ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதம் தர்மசங்கடமான  நிலைகளை சமாளித்து முன்னேற்றம் பெறும் மாதமாக இருக்கப் போகின்றது. இந்த சித்திரை மாதத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். குறுகிய வட்டத்தில் இருக்காமல் பரந்து விரிந்து சாதனை புரிவீர்கள். இதுவரை இனம் புரியாத பயம் இருந்து வந்ததே இனி அந்த நிலை மாறும்.

குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து பத்தாம்  வீட்டில் தொடர்வதால் பதட்டமான சூழல் ஏற்படும். வேலை சுமை அதிகரிக்கும். இரண்டு வேலைகளை ஒரே சமயத்தில் இழுத்து போட்டு  செய்ய வேண்டிய சூழல் உருவாகும். உங்கள் திறன் மேல் உங்களுக்கே சந்தேகம் வரும். ஒரு சிலர் உங்கள் மீது வீண் பழி  சுமத்துவார்கள். உங்கள் ராசியில் கேது  பகவான் தொடர்வதால் வீண் அலைச்சல், டென்ஷன்,  எதிலும் சந்தேகம் வரக்கூடும். ராகு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் கணவன் மனைவி இடையே கசப்பான சூழல் ஏற்படும்.

சனி பகவான் பன்னிரண்டாம் வீட்டில் தொடர்வதால் வீண் பழி, ஏமாற்றங்கள், அலைச்சல் ஏற்படக்கூடும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். பொருட்களை வாங்கும் பொழுது கவனமாக சரி பார்த்து வாங்கி கொள்ளுங்கள். ஒரு சிலருக்கு பண நஷ்டம் ஏற்படும். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். பன்னிரண்டாம் வீட்டில்  இருக்கும் செவ்வாய் பகவான் 30-4-2018 அன்று கேதுவுடன் இணைவதால் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் அலட்சியம் காட்டாமல் சிறிய வேலை என்றாலும் நேரத்திற்கு முடித்து விடுங்கள்.

From around the web