கும்பம் ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள கும்பம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் வருமானம் அதிகரிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது. மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் புதன் இருக்கும்போது கல்வி தொடர்பான காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். ஜூன் 5-ம் தேதி புதன் மிதுனத்தில் சஞ்சரிக்கும்போது அலுவலகத்தில், இல்லத்தில் பாராட்டும், புகழும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாத தொடக்கத்தில் மிதுனத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும்போது கல்யாண பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும். ஜூன் 9-ஆம் தேதி கடகத்தில் சுக்கிரன்
 
Kumbam june month rasi palan 2018

அன்புள்ள கும்பம் ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் வருமானம் அதிகரிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது. மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் புதன் இருக்கும்போது கல்வி தொடர்பான காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். ஜூன் 5-ம் தேதி புதன் மிதுனத்தில் சஞ்சரிக்கும்போது அலுவலகத்தில், இல்லத்தில் பாராட்டும், புகழும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாத தொடக்கத்தில் மிதுனத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கும்போது கல்யாண பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடிவடையும்.

ஜூன் 9-ஆம் தேதி கடகத்தில் சுக்கிரன் வருகின்றபோது நினைத்த காரியங்கள் நிறைவேறும். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். குரு உங்கள் ராசியை ஐந்தாம் பார்வையாக பார்ப்பதால் மனதில் உள்ள குழப்பங்கள் தெளியும். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல ஒன்பதாம் இடத்து குரு ஐந்தாம் பார்வையாக ராசியில் மீது விழுவதால் அதிக அளவில் நன்மைகள் நடைபெறும். குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் வக்கிர இயக்கத்தில் இருக்கும்போது பணப்பற்றாக்குறை அதிகரிக்கும்.

திருமணத் தடை விலகி மனத்திற்கேற்ற படி நல்ல வரன் அமையக்கூடும். ஆறாம் இடத்தில் ராகுவும், பன்னிரண்டாம் இடத்தில் கேது பகவான் பலமாக இருப்பதால் பயணங்கள் ஏற்படக்கூடும். செவ்வாய் கேதுவுடன் 12-ம் வீட்டில் பலமாக இருப்பதால் உடன்பிறப்புகளுடன் அனுசரித்து செல்லுங்கள். திறமை பளிச்சிடும். அதற்கேற்ப பாராட்டும், ஊதிய உயர்வும், பதவி உயர்வும் உண்டாகும்.

From around the web