கேது போல் கெடுப்பாரில்லை என்பது உண்மையா

பொதுவாக ஜோதிடத்தில் ராகு போல் கொடுப்பாரில்லை, கேது போல் கெடுப்பாரில்லை என்ற பேச்சு உண்டு. இது உண்மையா ராகுவின் காரகத்துவம் கொடுப்பது இதை பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம். கேது ஏன் கெடுக்கிறார் அவரை ஞானகாரகன் என்றுதானே சொல்கிறோம் பின்பு ஏன் அவர் நம்மை கெடுக்க வேண்டும் என்று நினைப்போம். பொதுவாக மனிதன் நினைப்பது ஆடம்பரமாக சுகபோகமாக, நல்ல மனைவி, குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்று நினைப்போம். நமது குடும்பம், உறவுகள், நண்பர்கள் பற்றி மட்டுமே அவர்கள்
 

பொதுவாக ஜோதிடத்தில் ராகு போல் கொடுப்பாரில்லை, கேது போல் கெடுப்பாரில்லை என்ற பேச்சு உண்டு. இது உண்மையா ராகுவின் காரகத்துவம் கொடுப்பது இதை பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம். கேது ஏன் கெடுக்கிறார் அவரை ஞானகாரகன் என்றுதானே சொல்கிறோம் பின்பு ஏன் அவர் நம்மை கெடுக்க வேண்டும் என்று நினைப்போம்.

கேது போல் கெடுப்பாரில்லை என்பது உண்மையா

பொதுவாக மனிதன் நினைப்பது ஆடம்பரமாக சுகபோகமாக, நல்ல மனைவி, குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்று நினைப்போம். நமது குடும்பம், உறவுகள், நண்பர்கள் பற்றி மட்டுமே அவர்கள் கவலை சார்ந்த விசயங்களையும் சிந்திப்போம். மற்றவர்கள் பற்றி சிந்திக்க மாட்டோம்.

கேது ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் நிலைக்கேற்ப அவரை ஞானகாரனாக ஆக்குகிறார். சிலருக்கு வலுவான இடத்தில் கேது இருக்கும்போது அவரை இந்த உலக பந்த பாசங்களில் இருந்தும், ஆடம்பரமான சுகபோகமான வாழ்வில் இருந்தும் வெறுப்புகொள்ள செய்து அனைத்து உயிர்களிடத்தும் அன்பு கொள்ள செய்கிறார். இந்த உலகம் ஒரு மாயை என்ற கொள்கைக்குள் நம்மை கொண்டு செல்கிறார். இறைவனை அடைய வழி காண்பிக்கிறார். அடிப்படையான திருமணம், தொழில், குழந்தைகள், சுகபோக வாழ்வு என சராசரியாக நாம் வாழும் வாழ்க்கையை வெறுக்க வைக்கிறார்.

பெரும்பாலும் எல்லோரும் நினைப்பது நல்ல பெண்ணை திருமணம் செய்யணும், நல்ல குழந்தைகள் பிறக்கணும், நல்ல தொழில் செய்யணும் பணம் கொழிக்கணும் என்றுதான் நினைக்கிறோம். இதுதான் ஒரு மனிதன் வாழ்வதற்கு அடிப்படையான வாழ்க்கை முறை. இந்த அடிப்படையான வாழ்க்கை முறையையே கேது கெடுக்க முயல்வார் சுகபோகங்கள் அனைத்திலும் வெறுப்புக்கொள்ள செய்து பந்தம் பாசமற்ற நிலையை பலருக்கு உருவாக்குவார். இறைவன் மீது ஒரு பிடிப்பும் மற்றவற்றின் மீது ஒரு வெறுப்பும் அவர் செய்வார்.

சராசரி மனிதர்களும் அவர்களின் குடும்பத்தினரும் திருமணம், குழந்தைகள், தொழில் இது போல இயல்பான வாழ்க்கையை விரும்புவார்கள். அதை தடுத்து நம்மை ஒரு ஞானி போல கேது ஆக்குவதால் இயல்பான வாழ்க்கையில் இருந்து கேது கெடுக்கிறார் என்ற அடிப்படையில் கேது போல் கெடுப்பாரில்லை என்றசொல் வந்திருக்கலாம்.

கேது உண்மையில் கெடுப்பதில்லை. வாழ்க்கையில் இதுதான் யதார்த்தம் ஆசைகளை விட்டு விடு இறைவனை அடை என்ற உயர்ந்த ஞானத்தை தான் நமக்கு போதிக்கிறார் என்பது உண்மை.

From around the web