கன்னி ராசி பங்குனி மாதம் ராசி பலன்கள் 2018!

கன்னி ராசியினருக்கு இந்த பங்குனி மாதம் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும் மாதமாக இருக்கப் போகிறது. ராசியிலிருந்து ஏழாம் வீட்டில் சூரியன் இருப்பதால் எதிலும் நிதானம், பொறுமையுடன் செயல் பட வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து போக வேண்டும். ஒரு சிலருக்கு வீண் அலைச்சல், இனம் புரியாத பயம் வந்து போகும். பதினோராம் இடத்தில் இருக்கும் ராகு பகவானால் உங்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மார்ச் 27 தேதிக்கு பிறகு சுக்ரன் சாதகமான வீட்டில் இருப்பதால்
 
Kanni panguni rasi palan 2018

கன்னி ராசியினருக்கு இந்த பங்குனி மாதம் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும் மாதமாக இருக்கப் போகிறது. ராசியிலிருந்து ஏழாம் வீட்டில் சூரியன் இருப்பதால் எதிலும் நிதானம், பொறுமையுடன் செயல் பட வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து போக வேண்டும்.

ஒரு சிலருக்கு வீண் அலைச்சல், இனம் புரியாத பயம் வந்து போகும். பதினோராம் இடத்தில் இருக்கும் ராகு பகவானால் உங்களுக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மார்ச் 27 தேதிக்கு பிறகு சுக்ரன் சாதகமான வீட்டில் இருப்பதால் ஆடம்பர வசதி பெருகும்.

அவ்வப்பொழுது வீட்டில் இருப்பவர்களுடன், கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வந்து போகும்.சந்தேகத்தால் பிரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதிசார வக்கிரம் பெற்ற குருவால் புதிய காரியங்கள், புதிய முயற்சிகள் எல்லாம் ஒருமுறைக்கு இரு முறை செய்ய வேண்டி வரக்கூடும். எதுவும் ஒரு முறை நடைபெறாமல் பல முறை முயற்சி செய்த பிறகு முடிவு பெறும். குரு பகவான் ஏப்ரல் 10-ம் தேதி முதல் வக்கிரம் பெற்று துலாம் ராசிக்கு வருவதால் வீட்டில் சுப விசேஷங்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சுக ஸ்தான வீட்டில் செவ்வாய் மற்றும் சனி சேர்ந்திருப்பதால் நெஞ்சு வலி, வயிற்று வலி, வாயுக்கோளாறுகள் வந்துப் போகும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதிலும் சிந்தித்து பேசுங்கள்.

ஒரு சிலருக்கு மார்ச் 30 தேதிக்கு பிறகு சகோதர வகையில் நன்மைகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. உறவினர்கள் வருகையால் நன்மைகளும் ஏற்படும். ஏப்ரல் ஏழாம் தேதிக்கு மேல் உறவினர் வகையால் மனக்கசப்பு வரக்கூடும்.

இதுவரை இருந்த மந்த நிலை மாறி, பணம் கைக்கு வரக்கூடும். கன்னி ராசி பெண்கள் நிதானமாக, பொறுமையுடன் இருக்க வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இல்லாமல் விட்டு கொடுத்துச் செல்லுங்கள். ஏப்ரல் நான்காம் தேதிக்கு மேல் ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகும். விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.

புதன் சாதகமாக இருப்பதால் உங்களின் திறமை வெளிப்படும். ஒரு சிலருக்கு பணிபுரியும் இடத்தில் நெருக்கடி வரக்கூடும். தொழில், வியாபாரத்தில் அதிகம் முயற்சி செய்து உழைக்க வேண்டும். மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை சிறு தடைகள், வேலை செய்யும் இடத்தில் இடையூறுகள் வந்து போகும். வேலை பளு அதிகரிக்கும் என்பதால் அதிகமாக உழைக்க வேண்டி வரும்.

சுக்ரன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் நினைத்தது ஒன்று நடைபெறுவது வேறு என்ற நிலை உருவாகும். ஒரு சிலருக்கு வெளியூர் செல்வதற்கு விசா கிடைக்கும். வேலை தொடர்பான வெளியூர் பயணங்கள் ஏற்படும்.

மாணவ, மாணவிகள் நவீன கருவிகளை அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து சிரத்தையுடன் படிக்க வேண்டும்.

பரிகாரம்:

வியாழக்கிழமையன்று தட்சிணாமூர்த்தியை தரிசித்து வந்தால் நன்மைகள் நடைபெறும்.

From around the web