கன்னி ராசி ஜூன் மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள கன்னி ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் சிந்தித்து செயல் படக்கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் புதன் மாத தொடக்கத்தில் ரிஷபத்தில் இருப்பதால் உறவினர்கள் வகையில் ஏற்பட்ட பகை மறையும். இல்லத்தில் சுணக்கம் நீங்கி இணக்கம் உண்டாகும். ஜூன் 5-ம் தேதிக்கு பிறகு புதன் மிதுனத்தில் வருகின்றார். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். வாங்கிய கடனை அடைக்கும் அளவிற்கு பணவரவு சீராகும். இந்த ஜூன் மாதத்தில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் எளிதில்
 
Kanni june month rasi palan 2018

அன்புள்ள கன்னி ராசிக்காரர்களே, இந்த ஜூன் மாதம் சிந்தித்து செயல் படக்கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் புதன் மாத தொடக்கத்தில் ரிஷபத்தில் இருப்பதால் உறவினர்கள் வகையில் ஏற்பட்ட பகை மறையும். இல்லத்தில் சுணக்கம் நீங்கி இணக்கம் உண்டாகும். ஜூன் 5-ம் தேதிக்கு பிறகு புதன் மிதுனத்தில் வருகின்றார். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். வாங்கிய கடனை அடைக்கும் அளவிற்கு பணவரவு சீராகும்.

இந்த ஜூன் மாதத்தில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் எளிதில் வெற்றி பெறுவீர்கள். அர்த்தாஷ்டம சனி வலுவாக  இருப்பதால் எதிலும் நிதானமாக செயல் பட வேண்டும். திட்டமிட்டு தீட்டும் திட்டங்கள் நிறைவேறாமல் போகும். நினைப்பது ஒன்று நடப்பது வேறு என்ற அளவிற்கு இருக்கக்கூடும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதம், சண்டை, சச்சரவு ஏற்படக்கூடும்

சிந்திக்காமல் செயல் பட கூடிய காரியங்களால் பொருள் இழப்பு, மனக் கஷ்டம் உண்டாகும். நேசித்தவர்கள் பகையாக போகலாம். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களை சார்ந்த குடும்ப உறுப்பினர்களால் அடுத்தடுத்து ஏதேனும் பிரச்சனைகள் வரக்கூடும்.

மாத தொடக்கத்தில் சுக்கிரன் பத்தாம் இடத்தில் இருப்பது பொன்னான நேரமாக இருக்கும். ஜூன் 9-ம் தேத்திக்கு பிறகு கடகத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வீடு மாற்றம், இடம் மாற்றம், நாடு மாற்றம் உண்டாகும். தாய்வழி உறவுகளில் விரிசல் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

குரு பகவான் வக்கிரத்தில் சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு புதிய பதவிகள், பொறுப்புகள் வரக்கூடும். குரு பகவான் வக்கிரத்தில் இருப்பதால் ஒரு சிலருக்கு வேலை மாற்றங்கள் உண்டாகலாம்.

From around the web