கன்னி ஜூலை மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள கன்னி ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதம் சுப செய்திகள் இல்லம் தேடி வரக்கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் புதன் பத்தாம் இடத்தில் வலுவாக இருப்பதால் துணிந்து செயல்பட கூடிய காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். உத்யோகத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரக்கூடும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம். உச்சம் பெற்ற செவ்வாய் கேதுவுடன் 5-ம் வீட்டில் இருப்பதால் எதிர்மறை சிந்தனைகள் தலைதூக்கும். அவ்வப்பொழுது மனக்குழப்பங்கள் ஏற்படக்கூடும். ஜூலை
 
Kanni july month rasi palan 2018

அன்புள்ள கன்னி ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதம் சுப செய்திகள் இல்லம் தேடி வரக்கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் புதன் பத்தாம் இடத்தில் வலுவாக இருப்பதால் துணிந்து செயல்பட கூடிய காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். உத்யோகத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரக்கூடும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யலாம்.

உச்சம் பெற்ற செவ்வாய் கேதுவுடன் 5-ம் வீட்டில் இருப்பதால் எதிர்மறை சிந்தனைகள் தலைதூக்கும். அவ்வப்பொழுது மனக்குழப்பங்கள் ஏற்படக்கூடும். ஜூலை 9-ம் தேதி செவ்வாய் வக்ரம் அடைவதால் தொழிலில் மாற்றங்கள் நிகழும். எதிர்பார்த்த பூர்வீக சொத்து பங்கீடுகள் முறையாக கிடைக்கும்.

செவ்வாய் சுக்கிர பார்வை இருப்பதால் சகோதர, சகோதரிகள் வழியில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறலாம். உங்களை விட்டு விலகி சென்ற உடன்பிறப்புகள் இப்பொழுது விரும்பி வந்து இணைவார்.

ஜூலை 4-ம் தேதி குரு வக்ர நிவர்த்தியாவதால் குடும்பம், தனம், வாக்கு, உத்யோக விருத்தி, தொழில் மேன்மை போன்றவை நல்லபடியாக இருக்கக்கூடும். உங்கள் ராசிக்கு 2,9 அதிபதியான சுக்கிரன் ஜூலை 9-ம் தேதி சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரித்தாலும் அதனை சமாளிக்கும் திறமை உங்களுக்கு உண்டு. உறவினர்கள் வருகை, உறவினர்கள் வீட்டு  விசேஷங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

சூரியன் 10-ம் வீட்டில் இருப்பதால் இழுபறியாக இருந்த காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடிவடையும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சூரியன் குரு பார்வை பெறுவதால் உங்கள் யோசனைகளை மற்றவர்கள் ஏற்று கொள்வார்கள்.

From around the web