கன்னி ராசி சித்திரை மாதம் ராசி பலன்கள் 2018!

கன்னி ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதம் தானுண்டு தன் வேலை என்று நீங்கள் இருக்க வேண்டிய மாதமாக இருக்கப் போகின்றது. குரு பகவான் உங்கள் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் இல்லத்தில் அமைதி நிலவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தள்ளிப்போன கல்யாணப் பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக முடிவு பெறும். சனி பகவான் நான்காம் வீட்டில் தொடர்வதால் அலைச்சல் ஏற்படும். கவனமாக செயல்பட வேண்டிய மாதமாக இருக்கப் போகின்றது. வாகனத்தில் சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும்
 
Kanni chithirai rasi palan 2018

கன்னி ராசிக்காரர்களே, இந்த சித்திரை மாதம் தானுண்டு தன் வேலை என்று நீங்கள் இருக்க வேண்டிய மாதமாக இருக்கப் போகின்றது. குரு பகவான் உங்கள் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால்  இல்லத்தில் அமைதி நிலவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தள்ளிப்போன கல்யாணப் பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக முடிவு பெறும்.

சனி பகவான் நான்காம் வீட்டில் தொடர்வதால் அலைச்சல் ஏற்படும். கவனமாக செயல்பட வேண்டிய மாதமாக இருக்கப் போகின்றது. வாகனத்தில் சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்.  உங்கள் மறதியால் பொருட்களை இழக்க நேரிடும். எதிலும் எச்சரிக்கையுடன் , கவனமாக இருக்க வேண்டும்.

செவ்வாய் கேதுவுடன் ஐந்தாம் வீட்டில் 30-4-2018 அன்று இணைவதால் யாரையும் வரம்பு மீறி விமர்சிக்க வேண்டாம். ராகு பகவான் பதினோராம் வீட்டில் தொடர்வதால் சீரான பணவரவு இருக்கும். கேது பகவான் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பூர்வீக சொத்து சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் தள்ளிப் போகும். அலுவலகத்தில் உங்களைப் பற்றி விமர்சனம் வரக்கூடும். மேல் அதிகாரிகளிடம் இருந்து நெருக்கடி வரக்கூடும் .சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வார்கள்.

சித்திரை மாதம் பிற்பகுதியில் அலுவலகத்திலிருந்த சூழ்நிலை மாறும். புதிய பொறுப்புகள், சம்பள உயர்வு வரக்கூடும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள்.

From around the web